குர்ஆன் குறள்!

பாக்கியமுள்ள இரவில் இறக்கிவைத்தோம் புர்கானை
பக்குவமாய் 44:3இல் அறி!

இறுதிவரை கிறிஸ்தவர்பால் ஆக்கினோம் பகைசினத்தை
மறந்ததால் உறுதியுரை தந்து 5:14

சத்தியத்தை முறித்தால் பரிகாரம் காணும்
பத்தியத்தை 5:89இல் காண்!

வெற்றிபெற வேண்டின் விலக்கிடுங்கள் மதுசூது
மற்றுமுள குறிபார்த்த லோடு ! 5:90

ஈஸாவின் இறப்புபற்றி இறைவனது வார்த்தைகளை
பேஷாக 5:110இல் காணே!

- நிஹா -