குர்ஆன் குறள் !

பற்றுவோன் மனோஇச்சையை தவறிடுவன் வழி
பற்றானே அல்லாஹ்வின் வழி ! 28:50

செலுத்திட முடியாதே நீர் விரும்பியவரை
செலுத்துவனே அல்லாஹ்விரும்பிய வரை! 28:56

அழியானே அல்லாஹ் எவ்வூர் களையும்
அநியாயக்காரர்களாக இருந்தால் அன்றி! 28:59

இருக்கிறானே முஃமின்களுக்கு உதவியாய் அல்லாஹ்
இருக்லையே நிராகரிப்போர்க் குதவி! 47:11

இவ்வுலக வாழ்வு அற்ப சுகமே
அவ்வுலக வாழ்வுடன் ஒப்பிடில்! 13:26

– நிஹா -