ஹைகூ கவிதைகள் – அறிதலின் இரகசியம்!

 

படித்தோரெல்லாம் அறிந்ததுமில்லை,
படியாதோரெல்லாம்
அறியாதிருந்ததுமில்லை

அறிதலற்ற வாழ்வு,
எந்த சீவராசிகளினதையும்விட
உயர்ந்ததல்ல.

மனிதவாழ்வின் உயர்வே
அறிதலில்.
அறிதல் பேரின்பம்.

 

- நிஹா -