குர்ஆன் குறள் !

குன்றிடாதீர் பலம் கொண்டிடாதீர் கவலை
விண்டிடுவர் ஈமான் கொண்டோர் 3:159

 

அளிப்பனே பதில் அழைப்போனின் அழைப்பிற்கு
இருக்கிறேன் அருகில் 2:286

 

நாடுவனே அல்லாஹ் இலகுதர உமக்கு
நாடானே நாளும் சிரமம் 2:185

 

செய்யாதீர் அநியாயம் செய்யப்பட மாட்டீர்
மெய்யாய் இயம்புது புர்கான் 2:179

 

பின்பற்றுவீர் வஹியை பொறுமைகாப்பீர் நீவிர்
மன்னவனின் தீர்ப்பு வரை 10:109

 

- நிஹா -