ஓட்டுக் கவிதைகள்! வேட்டுக் கவிதைகள்!

இலவசம் தருவதுதான்
வேட்பாளர் தகுதி,
இலவசத்துக்காக எதையும் இழப்பதுதான்
வாக்காளர் தரம்!

 

காடைத்தனம்
தேர்தல் காலத்தில்
மேடை ஏற்றப்படுவது
சோடை போகாது வெல்ல!

 

ஓட்டுப் போடும் முறை
மாறாதவரை
ஓடேந்தும் நிலையும்
மாறாது!

 

வாக்குப் பலம்
தம்போக்கில் செயற்படும்
போக்கிரிகளைக்
காக்கும் கவசம்!

 

புள்ளடி ஒன்றுடன்
செல்லாமற் போகும் வோட்டு
வெல்லவும் வைத்திடும்
கேடியை ஊட்டு!

 

- நிஹா -