இலவசம் பலவிதம் !

 

இலவசம் என்ற சொல்லைப்
பலவிதமாய் பாவித்து
எதனையும் கொள்ளையிடுவது
புதிய தந்திரோபாயம்!

 

மகுடிக்கு மயங்குவது பாம்பு.
இலவசம் என்றதும்
மதிகெடுவது மக்கள்.
பணம் பறிப்பதோ பாம்பாட்டி!

 – நிஹா -