ஹைகூ கவிதைகள்!

 

உடல் – உயிர்

 

உயிரை இழந்தால்
நாற்றமெடுக்கும் பிணம்
உடல்

 

உயிரை இழந்தால்
கடலும் ஏற்காதது
உடல்

 

தான் இருக்கும்வரை உலவவிட்டு
விரும்பியதும் உடலைவிட்டு
திரும்பிடுவது உயிர்

 

 

- நிஹா -