குர்ஆன் குறள்

 

அகிலத்தார்க்கு நினைவூட்டலேயன்றி வேறில்லை யிதென
புகலுதே அல்கலாம் 52

துதிப்பீரே ரப்பின் திருப்பெயர் கொண்டு
விதித்தானே ஹாக்கா கடை

ஈட்டிப் பொருளைச் சேமித்துப் பதுக்குவோனை
வாட்டி வதைக்கும்நரகு நாளை                    – 70:18

கணக்கிட்டு வைத்தானே எண்ணிக்கையா லெல்லாம்
கணக்கில் படைப்புகள் தனை                       – 72:29

ஆக்குவீர் பொறுப்பாளனா யவனையே ஞான்றும்
நோக்கிடாதீர் அவனை யன்றி                      – 73:7 

 

- நிஹா –