இந்திய இந்து சமயப் பிராமணர் கூறுகிறார்…

 இந்துக்கள் எதிர்பார்த்திருந்த கலியுக கல்கியின் அவதாரம்!  இஸ்லாத்தை அவணிக்களித்த இறைவனின் தூதராம் !

இந்துக்கள் மத்தியில் தசாவதாரங்களின் இறுதி அவதாரமாக, உலக அழிவு நடைபெறவுள்ள கலியுகமான இந்த யுகத்தில் கல்கி என்ற பெயரில் ஒருவர் வருவார் என்ற கருத்து நிலவி வருகிறது. அவர்கள் இது நாள் வரை எதிர்பார்த்திருந்த கல்கி என்பவர் வேறு யாருமல்ல, அவர், இஸ்லாத்தை அவணிக்களித்த அல்லாஹ்வின் இறுதிநபியும் தூதுவருமான முஹம்மது ஸல் அவர்களே என்கிறார் இந்து சமய (பிராமண) ஆய்வாளர். இதே கருத்து நீண்ட காலங்களுக்கு முன்னர், ஏறத்தாழ இருபது வருடங்கள் இருக்கலாம், ஒரு இந்திய இந்து சமய ஆய்வாளரால் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டிருந்தது. அது இவர்தானா என்பது எனக்கு ஞாபகமில்லை. எப்படியோ அந்தப் பழைய கருத்து அதே ஆதாரங்களுடன் தற்போது புத்தக ரூபத்தில் வெளியாகி உள்ளதாக இணையதளப் பத்திரிகையான தமிழ் CNN கூறியுள்ளதுடன், இவர் இந்நூலில் முக்கியமாக தெரிவித்து இருக்கின்ற விடயங்களை ஏற்கனவே சில இணையத் தளங்களில் வெளிவந்த விதத்தில் எழுத்துக்கள்கூட பிசகில்லாமல் அப்படியே மீளப் பிரசுரிக்கின்றோம் எனவும் கூறியுள்ளது. இவரின் பெயர் பண்டித் வைத் ப்ரகாஷ. இந்தியாவில் வங்காள மாநிலத்தை சேர்ந்த சமஷ்கிருத பண்டிதரான பிராமணர் ஆவர். அப்புத்தகத்தின் பெயரைத் ‘தமிழில் இறைதூதின் வழிகாட்டி’ எனலாமாம்.

விடயத்தைப் பகுப்பாய்வு செய்யுமுன், விடயத்தை விளங்கி ஏற்றுக் கொள்ள அல்லது நிராகரிக்க உதவ இறைவனின் நடைமுறை வேண்டப்படுவதால், அந்நடைமுறை என்னவென்று ஆய்வது காரியத்தை இலகுபடுத்துவதோடு சரியான முடிவைக் கண்டு உறுதிப்படவும் வழிகாட்டும். மேலும் உண்மை காண விழைவோரின் கட்டாய கடமையாகவும் அது ஆகின்றது என்பதால் அதனையே நாமும் செய்ய வேண்டியுள்ளது!

ஆக்கம் சிறிதோ பெரிதோ, நிறுவுபவர் எவ்வகைத்தவரோ என்றில்லாமல், தீர்வுகாண ஆதாரமே அறியப்பட வேண்டும், அதிலும் அல்லாஹ் பற்றியோ, அவனது விடயங்களோ பேசப்படும் போது, அவனது வெளிப்பாடுகளே சரியானதும் அதிகாரபூர்வமானதும். விஷேடமாக, நபிகளார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பற்றி இறைவனால் கூறப்பட்டதாயின், அதற்கு குர்ஆனிய ஆதாரமே வேண்டும். அந்த நிலையில் இறைவனின் வேதங்களை இறக்கும் போது கையாண்ட நடைமுறைகளை ஆராய வேண்டியுள்ளது முக்கியமாகின்றது. அப்படியான ஆராய்வின்போதே உறுதிப்படக்கூடிய உண்மைகள் வெளியாகும் சாத்தியங்கள் ஏற்படுகின்றன!

அந்த வகையில் கண்டறியப்பட்ட இறை நடைமுறைகள் பின்வருமாறு உள்ளது. இறைவனால் இறக்கியருளப்பட்ட ஓவ்வொரு மதத்திலும் பின்னர் வரவிருக்கும் தனது தூதுவர் பற்றி முன்னறிவிப்புச் செய்வது. அதே வழியில், ஒரு வேதத்தைத் தொடர்ந்து பின்னர் இறக்கப்பட்ட வேதத்தில், முன்னைய வேதத்தை/வேதங்களை ஏற்று மெய்ப்படுத்தி, சாட்சியம் கூறுவது. சங்கிலித் தொடராகவும், ஒன்றை ஒன்று ஊர்ஜிதம் செய்வதாகவுமான பண்புகளை ஏற்படுத்தும் இவ்விரண்டு நடைமுறைகளும் அவனுக்கே உரிய உத்திகளாகவே இறைவனால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளமையைக் காணக் கூடியதாயுள்ளது.

இது மூன்று விதமான நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒன்று முன்னைய வேதத்திற்கு இது மாற்றமல்ல என்பது! அடுத்தது இவ்வேதத்தையும் அதனைக் கொணர்ந்த தூதுவர்களையும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது. அடுத்தது, அனைத்து வேதங்களும் ஒன்றுதான் காலதேய வர்த்தமானங்களுக்கேற்பவும், சமூகங்களின் பாஷைகளில் அருளப்பட்டாலே அவர்களால் விளங்குவது இலகு என்று கருதி வெவ்வேறு பாஷைகளில் காலத்திற்குக் காலம் தன்னால் அருளப்படுகின்றது என்பது. இவ்வுண்மைகளை வேதங்களில் கண்டறிந்து சிந்திப்போர் உணர்ந்தறிவர்.

ஆய்வாளர் குறிப்பிட்டுள்ள நபிகளார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பற்றிய உண்மை முன்னைய வேதமான இந்து சமய்ததிலும் கூறப்பட்டிருக்கிறது என்பது, உண்மை என்ற தீர்வுக்கு வருமுன்னர், மேலே கூறிய பின்னர் வரவுள்ள தனது தூதர் பற்றிய எதிர்வுகூறல் என்ற இறைவனின் வழிமுறையில் ஒன்று, முகம்மது விடயத்திலும் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதைக் காண வேண்டியுள்ளது, அடுத்து, அப்படிக் கூறப்பட்டவர் கொணர்ந்த வேத நூல் –  குர்ஆனிலும் முன்னைய நபிமார்களது வேதங்கள் மெய்ப்படுத்தப்பட்டு, சாட்சியம் கூறப்பட்டுள்ளதா என்பது பற்றியும் அறிய வேண்டும்!

விடயத்திற்கு வருவதாயின் முதலில் மேற்கண்ட ஆய்வாளரின் கண்டுபிடிப்பை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியே உள்ளது. அந்த வகையில் இறைவனின் நடைமுறையில் முந்தியதான நபிமார் பற்றிய எதிர்வு கூறல் பற்றியது என்பதால், அவரது கூற்றும் அதுவென்பதால் அது ஓரளவு ஏற்கும் நிலைக்கு நம்மை தள்ளி விடுகின்றது. இரண்டாவது, மேலதிகமாக, வேறு முக்கிய வேதங்களிலும் கூறப்பட்டுள்ள தா என்பதை அறிவது, ஆய்வாளரின் கருத்து உண்மை என்று வலுச் சேர்க்கும்.

ஆய்வாளரின் கூற்றை விசாரணைக்கு உட்படுத்துவதற்குத் தேவையான, குர்ஆனில் இறைவன் கைக்கொண்டுள்ள வழி முறைகளும், நடைமுறைகளும், கிறிஸ்தவ வேதநூற்களான புதிய, பழைய கோட்பாடுகளாகக் காட்டப்பட்ட, மோஸேயினதும். யேசுவினதும் ஆகமங்களைக் கொண்ட புனித பைபிளிலும்  காணப்படுகின்றனவா என்பதை நோக்கின், அதுவும் சாதகமான பதிலையே தருகின்றது.

மேலும், ஆய்வாளரது, முஹம்மது பற்றி இந்து மதத்தில் கூறப்பட்டதாகக் கூறும் எதிர்வு கூறலை ஏற்க இறையவனின் இரண்டாவது நடைமுறையான, முன்னைய வேதம் பற்றிய கூற்று நிறைவு செய்துள்ளதா என்பதைக் காண வேண்டியுள்ளது!அததை் தீர்மானிப்பதற்கு முன்னதாக, இக்கருத்தைக் கொண்டுள்ள வேதம் இறைவேதமா எனக் கண்டறிய வேண்டியுள்ளது.

இறைவேதமா என்ற கருத்தைக் கண்டறியும் ஓரே ஆதாரம், அவ்வேதம் ஏகதெய்வ, ஓரிறைத் தத்துவத்தைக் கொண்டிருத்தலே! அந்த வகையில் இந்து சமய வேதங்களாகக் குறிப்பிடப்படும் வேதங்களில் ஏக தெய்வக் கோட்பாடு காணப்படுகின்றதா! அது போன்றே கிறிஸ்தவ சமயத்திலும். முஹம்மது பற்றிய கோட்பாடு காணப்படுமாயின், அதனையும் ஏற்க, அதுவும் ஏக தெய்வக் கொள்கையைப் போதிக்கின்றதா எனக் கண்டறிய வேண்டியுள்ளது.

மேற்கூறப்பட்ட இரு மத நூல்களிலும் ஏக தெய்வக் கொள்கையை வலியுறுத்தும் விடயங்கள் பல விரவிக் கிடக்கின்றன. அது பற்றிய தேவை ஏற்பட்டால் வெளிப்படுத்தலாம்! ( இது பற்றிய உண்மையை, இதே தளத்தில், ஓரிறை பற்றி பைபிள் என்ற பதிவிலும், ஓரிறை பற்றி இந்து சமய வேதங்கள் என்ற பதிலிருந்தும் அறியலாம்) அந்த அடிப்படையில், இவர் கூறும் கருத்து பின்னால் வரவுள்ள இறை தூதரை முன்னறிவிப்புச் செய்தல் என்ற இறைநடைமுறைக்குள் அடங்குவதாகவே தெரிகின்றது!அது போன்றே கிறிஸ்தவ சமய நூலான பைபிளிலும் நபிகளார் பற்றிய எதிர்வு கூறல் உண்டு.

இரு பெரிய வேதங்களும் முதலாவது இறை  வழிமுறையைப் பூரணப்படுத்தி உள்ளதால்,  இரண்டாவது கூற்றான புனித குர்ஆனில் இவ்வேதங்களில் காணப்படும் உண்மை பதிவாக்கப்பட்டு,  சாட்சியம் கூறப்பபட்டுள்ளதா என்பதைக் காண வேண்டியுள்ளது. அத்தோடு இவரது கூற்றை ஏற்க, முகம்மது அவர்கள் இறுதியாக இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதர் என்பதை மற்றைய வேதங்களிலும் கூறப்பட்டிருத்தல் வேண்டும். அந்த வகையில் இதனை அறிய அனைத்து வேதங்களையும் ஆய்வு செய்ய முடியாவிட்டாலும், மிக முக்கிய வேதங்களாகக் கருதக் கூடிய இந்து, கிறிஸ்தவ வேத நூல்களையும். அவர்களின் கிரந்தங்களையும் பார்வையிட வேண்டியுள்ளது.

இந்துக்களின் நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வன வேதத்தில், ‘அல்லாஹ் ஜியேஷ்டம் பரம்மப் பூரணம் பிரஹ்மானம் அல்லாம் அல்லோ ரஷ_லா மஹாமத் கவரஸ்ய… அல்லோ அல்லா ஸலமீர மொஹாரினி ஹோம் கிரீம் அல்லோ ரஷ_ல் மஹாமத் கவரஸ்ய அல்லோ அல்லா இல்லாலே தி இல்லல்லா’ இப்படிக் கூறப்பட்டதன் தமிழாக்கம். அல்லாஹ்வுக்கு துவக்கம் இல்லை. அவன் சம்பூரணமானவன். முழுப்பிரமானத்துடைய இரட்சகன். சிவனுடைய பதவியிலிருக்கும் ‘மஹாமத்’ அல்லாஹ்வுடைய ரசூல் (தூதுவர்). ஓம்கிரீம் மந்திரம் மூலமாக தீயோர்களை அழிக்கும் மஹாமத் அல்லாஹ்வுடைய ரசூல். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை.

பைபிளின் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் முஹம்மது நபியவர்களின் வருகை பற்றி சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆயினும், பழைய ஏற்பாட்டின் சங்கீதம் 5:16இல் அவரது பெயரே குறிப்பிடப்பட்டிருப்பதாக தற்போது யூத சமயப் பெரியார்களான ரப்பி என அழைக்கப்படுவோர் பகிரங்கமாக ஆதாரபூர்வமாக பைபிள் மூலம் நிறுவியுள்ளனர்.

மேலும், வியாச முனிவர் தமது பவிஷ்ய புராணத்தில் பின்வருமாறு முன்னறிவிப்புச் செய்துள்ளார். ‘ஏ தஸ்மின் ஷந்தரே மிலேச்ச ஆசாரியன ஸமன்வித மஹாமத் இதிக்கி யாத சிஷ்ய சாகா ஸமன்வித நிருஷ்தேவ மஹாதேவ மரூஸ்தல நிவா லினம்’அதன் தமிழாக்கம்: பாகம் 3, சூத்திரம் 3, சுலோகம் 5-8வரை. ‘பிற நாடு ஒன்றில் ஓர் ஆண் சீர்திருத்தவாதி தம் சீடர்களுடன் வருவார். அவர் பெயர் ‘மஹாமத்‘. ஆவர் பாலைவனத்தைச் சேர்ந்தவர். ‘லிங்கசேதி ஸிஹாதீன சுமக்ருதாரி ஸதூஷக உச்சாலாபி சர்வ பக்ஷ் பவிஷ்யதி ஜனோமம்’ தமிழாக்கம்: அவர்கள் விருத்த சேதனம் செய்வார்கள். தலையில் குடுமி இருக்காது. தாடி வைத்திருப்பர். உரத்த குரலால் அழைப்பார்கள்.

அப்படி இறக்கி அருளப்பட்ட வேதங்களில் இறுதியானதுதான் இஸ்லாம். அதைக் கொணர்ந்தவர்தான் இறுதி நபியும் தூதுவருமான முஹம்மது நபியவர்கள். இவ்வேதத்தில் இறைவன் வேதம் சம்பூரணமாக்கப்பட்டு, பாதுகாக்கபபட்டு, மனிதர்களுக்குத் தனது அருளை முழுமையாக்கி விட்டதாகக் கூறுவதில் இருந்து அறிந்து கொள்ளலாம். 

இஸ்லாத்தின் வேதநூலான புனித குர்ஆனும், ஏக தெய்வக் கொள்கையைக் கொண்டிருப்பது உலகறிந்த விடயம். அதனால், இதற்கு முன்னர் வந்த வேதங்களை மெய்படுத்தி, சாட்சியமும் கூறி, அதனைக் கொணர்ந்தவர்களையும் பற்றிக் கூறி, அவ்வேதங்களையும் அதனைக் கொணர்ந்தவர்களையும் நம்பிக்கை கொள்ளும்படி கூறியுள்ளது. ஆயினும் தனக்குப் பின்வரவுள்ளதாக எந்த வேங்களையுமோ, நபிமார்களையுமோ குறிப்பிடாமைக்குக் காரணம், இவ்வேதம் சம்பூரணமாக்கப்பட்டு விட்டதாகவும், தனது அருட்கொடையை முழுமையாக மக்களுக்குச் சொரிந்து விட்டதாகவும் கூறி, இது இறுதி வேதமென்பதை வெளிப்படுத்தியதனால் தெளிவாகின்றது.

ஆக  முன்னைய மூன்று வேதங்களும், இறுதியாக இஸ்லாமும் ஏற்றுக் கொண்ட மனிதராகவே முகம்மது நபியவர்கள் காணப்படுவதால், இறுதி வேதமாகவும் இஸ்லாம் அறியப்படுவதால், இந்து சமய ஆய்வாளர், உலக முடிவாகவுள்ள இறுதிக் காலமாக இந்து சமயம் கருதும் கலியுக காலத்தில் கல்கி என்ற பத்தாவது அவதார புருஷர் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படும், மனிதர் முகம்மதுதான் என்று அவர் கூறும் கூற்று ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகவே இருக்கின்றது.

மேலும், ஆய்வாளரின் கல்கி – முகம்மது பற்றிய ஒப்பீடு கீழே தரப்படுகின்றது. அந்த ஒப்பீடுகள் மேற்கண்ட விடயங்களுக்கு வலுசேர்த்து, கல்கி அவர்களின் வரவுக்காகக் காத்திருக்கும் இந்துக்களுக்கு சிறப்பாகவும், உலகத்தாருக்குப் பொதுவாகவும், 1400 வருடங்களுக்கு முன்னர் அவணியில் அவதரித்த முகம்மது எனற, இறை தூதரும், குர்ஆனை மானுட வர்க்கத்திற்காக அல்லாஹ்விடமிருந்து பெற்று நடைமுறைப்படுத்திக் காட்டியவருமான  இறைதூதர் நபிகளார் முகம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களே கல்கி என்ற அவதார புருஷர் என்பதை அறியலாம்

அத்தோடு, நடைபெற்றுக் கொண்டிருப்பது இறுதி யுகம் தான் என்பதை, குர்ஆன் பல் வேறிடங்களில் கூறிக் கொண்டிருக்கின்றது. ஆக, அவதாரம் என்ற ஒரு கூற்றே, இஸ்லாம் கூறாத ஒன்று. அவதாரம் என இந்து மதம் கூறும் முன் ஜென்மம் மறு பிறவி பற்றிய விடயங்களை எனது முன்ஜென்மம்  (  http://factsbehind.net/wp/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D  ) என்ற கட்டுரையில் விவரித்துள்ளேன். அதனை, இதே தளத்தில் காணலாம்.

சமஷ்கிருத பண்டிதரான பிராமணர் ‘பண்டித் வைத் ப்ரகாஷ’ அவர்களின் கல்கி – முஹம்மது நபி ஸல் ஓப்பீடு                                                                    (கல்கி 2:4,5,7,11,15)

கல்கி.                           ஒற்றுமை                    முஹம்மதுஸல்

Father விஷ்னு யாய்- Worshipper of God  Abdullah – Slave of Allah

Mother   சுமதி  –             Peace                       Aamina – Peace

Place of BirthSambana -Place of Peace-DarusSalamHouse of Peace                                                                                                             Makkah           

Born in Chief Priest    High Class – Banu Hashim Kuraishi Family 

Camel & sword          Transport/Weapon      Camel & Sword

1st half of 12th day     – Prophecy –  Prophet at the age of 40

Final Message                Status          Seal of Prophet

Received knowledge in Montai-Source-Received Message from Allah  

Example Character       Character                    Beautiful Example

Special Qualifications 8   Qualifications         Special Qualifications

Teacher of World –  Work/Profession   –   Preacher of Religion of World 

Helped by04Companions-Source of help-Hlpd by04Cmpanions (Sahaba)

Guide Right Path    –        Mission   –            Guide Straight Path

Helped by Angel             Spiritual Help              Helped by Angels

-நிஹா -