வாக்கு வெறுமனே கூறும் பெறுமதியற்ற
சாக்குப் போக்காகவே பாவிக்கப்படுகிறது!

இறைவனின் அம்சமாகவிருந்த வாக்கு
மறைவோரின் புகலிடமாகியுள்ளது!

எப்போது வாக்குகள் காப்பாற்றப்படுகின்றனவோ
அப்பொழுது அச் சமூகம் விடுதலை பெற்றுவிடும்!

வாக்குகள் தேக்கமடைந்து விடுமாயின் அது அநியாயத்திற்கு
அநீதிக்கு அனுமதிப்பத்திரம் வழங்கிவிடுகிறது!

வாக்குகள் காக்கப்படாவிடில்
நம்போக்குகள் நரகத்தை நோக்கியதாயிருக்கும்!

வாக்கு பண்பாளரின் தனியுடமை
வம்பர்களின் வாய் ஜாலம்!

மனிதனுக்கு மட்டுமே இருக்கக்கூடிய மகத்தான பண்பு
மிகச் சிலரிடம் மட்டுமே காணப்படும் வாக்கு !

மனிதனை இறை நெருக்கத்தின்பால்
இட்டுச் செல்வதும் வாக்கே!

இறைவன் மட்டும் வாக்கு மாறுபவனாக இருந்திருந்தால்
இவ்வுலகு என்றோ அழிந்திருக்கும்!

யுத்தங்களால் ஏற்பட்ட இழப்புகளைவிட
வாக்குமாறியதால் ஏற்பட்ட அனர்த்தங்களே அதிகம்!

தொடரும் …

- நிஹா -