1. செய்யாததற்குப் புகழ்தேடின் செய்வானே வேதனை
  மெய்யாக மறுமையில் 3: 188
 2. இறந்தாலும் உயிருண்டு ஊட்டுவனே உணவும்
  இறந்தாலவன் பாதையில் 3 :169
 3. தருமேயுலோபந் தீமையை இம்மையில் மறுமையில்
  வருமே தண்டனை 3: 180
 4. அகற்றியே தீமையை நுழைப்பனே சுவனத்துள்
  அகன்றாரை என்பாதையில் 3 :195
 5. வெல்லுவா ரெவருமிலை வந்திடிலவனுதவி நம்பிட
  சொல்லுதே 3: 160 நமை
 6. உதவிடுவார் யாருளர் அவனுதவி வராவிடில்
  ஆதலின்  3: 160தை நம்பு
 7. பார்த்திடு பார்த்துப்பின் தாழ்த்திடு பார்வையை
  தேர்ந்து தீமைதராத வாறு
 8. அச்சமுங் கவலையு மறவேயொழித் திடின்
  கச்சிதமா யமையும் வாழ்வு
 9. சபிப்பானே அல்லாஹ் மறைத்திடில் வேதவுண்மை
  சபிப்பரே வானோருஞ் சேர்ந்து                      2: 159
 10. நேசிப்பீராயி னவனை பின்பற்றுங்க ளெனை
  நேசித்து மன்னிப்பானல்லாஹ் 3 :31

  - நிஹா -