குர்ஆன் குறள் !

 
அல்ஹம்து லில்லாஹிரப்பில் ஆலமீன் 10:10இல்
அழகான முடிவதான பிரார்த்தனையாமே!

தட்டழிந்திடவே விட்டு வைத்தான் வழிகேட்டிலே
சந்திப்பை நம்பார் தமை! 10:11

அழைத்திடுவான் துன்பம்பரின் அனைத்து நிலையில்
அழையாவா றகல்வா னகன்றிடில் 10:12

அல்லாஹ்வி னோர்நாள் நம்மாயிரம் வருடமென
அல்ஹாஜ் 47இல் அழகாக நவின்றானே!

வானவரேறிடும் அந்நாள் ஐம்பதாயிரம் வருடமென
ஞானவான் நல்கினான் 70:4இல்

நெருங்காதீர் விபச்சாரம் மிகக்கெட்டது மானக்கேடை
வருவிக்கும் என்குது 17:32

என்னைநினைவு கூர்ந்திடத் தொழுகையை நிலைநிறுத்துக
மனிதனைப் பணிக்கின்றான் 20:14இல்

 

- நிஹா -