சூனியத்தை அல்லாஹ் அறிவித்தபடி அறிவோம்!

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் முயற்சியே சூனியம் பற்றிய மறுப்பு. குர்ஆனை ஏற்பது கடமை. அதில் நாம் அறியாத விடயங்கள் இருக்கலாம் அதனை மறுப்பதற்கில்லை. நமக்கு விளங்காதது என்பதால் முற்றுமறிந்த அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா, உலக முடிவு வரை முழு உலகையும் வழிகாட்ட அருளிய வேதம் இதில் பல பொருளுள்ளவற்றை, கற்றறிந்தோர் இவை அல்லாஹ்விடம் இருந்து அருளப் பெற்றது என்று ஏற்றுக் கொள்வார்கள் என்பது இறை மொழி. ஆதலால் இறைவனும் நமது அக்காலத்தில் விளக்கம் பெற முடியாத விளங்காமையை ஏற்கின்றான். ஆனால், விளங்காமையால், அவசரப்பட்டு மறுத்துக் கொண்டிருக்கும் நிலை, சிந்திப்போருக்கு மாற்றம் பெறலாம். இன்ஷாஅல்லாஹ்!

சிந்தித்தும் விளங்கிக் கொள்ளாதோரையே அல்லாஹ், பூமியில் ஊர்ந்து திரிவனவற்றில் மோசமானதாகக் கூறுவதுடன், அல்லாஹ் விளங்காதோர் மீது வேதனையை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றான். இதனை அறிந்த ஞானவான்களே அவற்றை மறுக்காது ஏற்கின்றார்கள். இன்று நாம் விளங்க முடியாது இருப்பது, அல்லது பொய் போன்று தெரிவது, நாளை நமது அறிவு மேம்பட்டதன் பின்னர் – அது போன்ற ஒரு நிகழ்வு நமக்குத் தெரிய வந்ததன் பின்னர் உண்மையாகவம் நன்மையாகவும், வீண் அல்லவென்றும் தெரிந்துவிடுகின்றது.

நாம் மிக அண்மைக் காலம் வரை ஒளியே வேகமானது என்ற அறிந்து கொண்டிருந்தோம். ஆயினும, அக்காலத்தி‌லேயே ஞானவான்கள், மனோவேகம் அனைத்திலும் கூடியது என்பதை அறிந்திருந்தனர். அதனைப் பயன்படுத்தி தமது வேலைகளை இலகுவாக, மிகக் குறுகிய நேரத்தில் முடித்தும் இருந்தனர். அவற்றுக்கான ஆதாரம் குர்ஆனே தருகின்றது. அதனால்தான் அல்லாஹ் சில வரலாறுகளைக் கூறிவிட்டு நீர் இவற்றை முன்னர் அறிந்தவராக இருக்கவி்லலை. மார்க்கம் என்றால் என்வென்றும் உமக்குத் தெரியாதிருந்தது அவற்றை நாமே கற்றுத் தந்தோம் என்கின்றான். ஆதம் அலை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தனால்தான் வானவர்களைக் கொண்டு சிரவணக்கம் செய்வித்தான். அங்கு சிரவணக்கம் மனிதனுக்குச் செய்யப்பட்டது என்பதைவிட அவனது அறிவுக்கே அதுவும் அல்லாஹ்விடமிருந்து கொடுக்கப்பட்ட அறிவுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்.

இஸ்லாம் அறிவின் அடிப்படையில் உருவான இயற்கை மார்க்கம். இங்கு மூடக் கொள்கைகளுக்குச் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. இறை வேதங்கள் சூனியமாகப் பார்க்கப்படடன. பூமி தட்டை என நம்பிக் கொண்டிருந்த மக்களிடம்தான் அல்லாஹ் இரவு பகல் வருவதில் உங்களுக்கு அத்தாட்சி உண்டென்கின்றான். இதுவும் அக்காலை சூனியமாகவே கூறப்பட்டது. தூரதிருஷ்டியை ஞானத்தால் கொண்டவர்களே அன்று வானியல் உண்மைகளை வகைப்படுத்தினர். அவை அனைத்தும் அன்று மூடநம்பிக்கைளாகக்கூட தெரிந்திருக்கலாம்.அதனால்தான் பூமி உருண்டை என்ற கலிலியோ தெருவீதிகளில் இழுத்துச் செல்லப்பட்டு நையப்புடைக்கப்பட்டான்.

நாயகம் ஸல் அவர்களை அண்மையிலுள்ள மஸ்ஜிதுக்கு ஒரு இரவில் அழைத்து சென்றதாகக் கூறியிருப்பதிலும், அவர்களுக்குக் காண்பிக்கப்பட்டதிலும் அத்தாட்சிகள் உண்டு என நம்பியவர்கள்தான் அதிவேக விமானங்களையும், தொலைக் காட்சியையும் கண்டு பிடித்தனர். மூஸா அலை அவர்களுக்கு தௌறாத் வேதத்தை எழுதிக் கொடுத்ததை மறுப்போர் இன்று அன்று நடந்தது பொய்யோ சூனியமோ அல்ல என்றே நம்புகின்றார்கள். காரணம் இன்று , வயர்லெஸ், தொலை நகல், குறுஞ்செய்தி எஸ்எம்எஸ், ஈ மெயில் என்பவைகளை கண்ணாரக் காண்பதே! அது மட்டுமல்ல இன்று ஒப்டிக் முறை மூலம்32 டெரா பைட்ஸ் பரிமாற்றம் செய்யப்படுகின்றது.

இதனால்தான் அன்று சில விடயங்களை அறிஞர்கள் இவை அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தது என நம்பினார்கள். அவை இன்று விளக்கமும் பெறுகின்றது நடைமுறைக்கும் வந்துள்ளது. ஒளியின் வேகத்தைவிட டெச்சியோன் என்ற ஒரு ஹைபோதெட்டிக் சப்ஸ்டன்ஸ் பயணித்துக் கொண்டிப்பதாகக் கூறுகின்றனர். இதைத்தான் அல்லாஹ் நாம் விரிவாக்கலுடையோம் என்று கூறியிருக்கின்றான். இவற்றை எல்லாம் உருவாக்கிய நுண்ணறிவாளனை நம் சின்ன அறிவால் விலை கூற முடியாது.

பக்கத்திலுள்ள பொருளைக் காண முடியாத நாமனைவரும் எங்கோ பல கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள சூரியனை வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் காண்கின்றோம் இவை அல்லாஹ்வால் காட்டப்படுகின்றது. இ‌து அவனது அருட்கொடை. குறிப்பிட்ட பருமனுக்கு மேல் நாம் காண முடியாது. சூனியத்தை நாம் காண முடியாது. ஆம் அச்சூன்யம் கண்ணெதிரே உள்ளது. ஐம்புலன்களும் அதில் தோல்வி கண்டுள்ளது. அதனால்தான் அதனைச் சூன்யம் என்கின்றோம். அதனை ஸ்பேஸ் எனும் வெளியாகக் கண்டுள்ளனர்.

இச்சூனியம் இன்றேல் நம்மால் இவ்வுலகில் வாழ்வதை நினைத்தும் பார்க்க முடியாது. 67ஆயிரம் மைல் வேகத்தில் பயணித்துக் கொண்டும், ஆயிரம் மைல் வேகத்தில் சுழன்று கொண்டுமிருக்கும் இப்பூமியில் நடப்பவற்றை நாமறிகிறோமா! இவை இப்பூமியை நாமிருப்பதற்காக செவ்வைப்படுத்திய இறைகருணை. பூமியில் இவ்வியக்கம் இன்றேல் இது உயிர்க் கிரக‌மாகவோ, ஈர்ப்பு சக்தியைக் கொண்டதாகவோ இருந்திராது. நாமெல்லாம் அண்டவெளியில் தூக்கி வீசப்பட்டு மிதந்து கொண்டிருப்போம் இப்படி அல்லாஹ்வின் கருணையைக் காருண்யத்தை, நுண்ணறிவை என் வாநாள் முழுவதும் எழுதிக் கொண்டிருக்கலாம். அப்போதும் அது முடிவுறாது. நான் மட்டுமல்ல இவ்வுலக மக்களனைவரும் எழுதிக் கொண்டிருந்தாலும் அப்போதும் முடிவுறா. ஆதலால், இந்த அளவில் அவற்றை முடித்துக் கொண்டு மிகுதியைப் பார்ப்போம்.

ஆதலின், நாமனைவரும் குர்ஆனை அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதை நம்புவோம். இன்றேல் நாம் காபிர்கள். அவற்றைச் சிந்திப்போம். நமக்கு விளங்காதவை இருந்தால், குருடர்கள் போன்று, இதுதான் யானை எனக் கூறிக் கொண்டிருக்க வேண்டாமே! அதற்காகத் தம் சிற்றறிவால் அல்லாஹ்வின் செயல்களுக்கு வரைவிலக்கணம் கொடுத்து நம்முள் சண்டை பிடித்துப் பிரிவுகளை உண்டாக்கி, கேவலப்பட்டு, மார்க்கத்திற்கும் அபகீர்த்தியை உண்டாக்கி, அல்லாஹ்வை அறியாமையில் மூழ்கியிருப்போர் தரக் குறைவாக விமர்சிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஆக்கிக் கொடுக்காதிருப்போமாக!

அதற்காக, சுலைமான் அலை அவர்கள் காலத்தில் ஷைத்தான்கள் ஓதிக் கொண்டிருந்ததை அக்கால மக்கள் ஓதிக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் பாபிலோனில் நிலவிய அந்த சூனியக் கலையையும், ஹாரூத், மாரூத் ஆகிய வானவர்களுக்கு அல்லாஹ் அருளியதையும் கற்றுக் கொடுத்தாகவும், பின்னர் அ்ம்மக்கள் கணவன் மனைவியருக் கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதையும் கற்றுக் கொண்டதையும், அல்லாஹ்வின் நாட்டமின்றி அவர்கள் யாருக்கும் அதனால் இடர் விளைவிப்போரல்ல என்பதையும், அவற்றைச் செய்த கொண்டிருந்தமை அல்லாஹ்வால் தடை செய்யப்பட்டிருக்கின்றது, அதாவது நிராகரிப்பு எனவும், இல்லாத ஒன்றை அல்லாஹ் தடை செய்திருக்கவும் மாட்டான், அதைச் செய்ததற்காக மறுமையில் தண்டிக்கவும் மாட்டான், அதனை ஆத்மாவுக்குப் பகரமாகப் பெற்றுக் கொண்டதாகவும் கூறி இருக்கவும் மாட்டான் என்பதை விசவாசம் கொள்ளுங்கள். தாங்களும் அறியாதவர்களாக இருந்து அடுத்தவர்களையும் வழி கெடுத்து அனைவரினதும் பாவங்களைச் சுமக்காதீர்கள். அல்ஹம்துலில்லாஹ்!

இவற்றில் வீணே காலத்தைப் போக்கி, மக்களைத் திருத்துவதாகக் கூறி கலகத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை முற்றும் அறிந்த அல்லாஹ் அறிந்திருந்ததாலேயே, மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை எனவும், தனது தூதை மட்டுமே எடுத்துச் சொல்லும்படியும் ஏற்றுக் கொள்ளாத அறிவீனர்களிடம் இருந்து ஸலாம் கூறி விலகி்க் கொள்ளுங்கள் எனவும், உமக்கு யாரையும் வழிப்படுத்திட முடியாது எனவும், நேர்வழியோ, வழிகேடோ இரண்டும், யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதைத் தான் மட்‌டுமே அறிந்து அதற்கேற்ப வழிகெடுத்தோ, வழிநடத்தியோ வருவதாகவும் கூறியுள்ளான்.

அதற்காகவே ஏழு வசனங்களைக் கொண்ட மீண்டும் மீண்டும் ஓதக் கூடிய அந்த சூரா பாத்திஹாவில் நேர்வழியைக் காட்டுமாறு இறைஞ்சும்படியும் ‌அறிவுறுத்தி உள்ளான். ஆதலால் அதன்படி நடந்து அவன் கூறியபடி படிப்படியாகப் படிகளைக் கடந்து, அவனது திருப்தியைப் பெற்று, அவனது பதவியேற்றத்தையும் பெற்று, ஏற்கனவே வெற்றி பெற்ற நல்லோருடன் அவன் சந்நிதானத்தில் இணைந்து கொள்வோமாக! ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்!

 

 

- நிஹா -