Monthly Archives: November 2014

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

 தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 9:112

தவ்பா செய்கிறவர்கள், வணங்குபவர்கள், புகழ்பவர்கள், நோன்ப நோற்பவர்கள், ருகூவு செய்பவர்கள், சுஜுது செய்பவர்கள், நன்மையானவற்றைச்செய்யுமாறு ஏவுபவர்கள், தீமையை விட்டும் விலக்குபவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள், இத்தகைய முஃமின்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

 

- நிஹா -

 

Al Quran 9:112

 

Those that turn in repentance; that serve Him; and praise Him; that wander in devotion to Cause of Allah; that bow down and prostrate themselves in prayer, that enjoin good and forbid evil; and observe the limits set by Allah, – so proclaim the glad tidings to the Believers. 

 

- niha -

குறள் நெறி!

குறள் நெறி!

 

பேச்சு மூச்சால் வருதலால் பேச்சில்
இச்சை தவிர்த்தல் நெறி!

 

கருத்தை விரித்து சிரிப்பால் சீர்படுத்தி
வருத்திடாது வாயைப் பேணே!

 

காலாட்டின் கடந்திடும் காதம் மீறி
வாலாட்டின் வருமோ இடம்!

 

பேசிடுக தக்கதை பேசற்க மற்றதை
தோஷியாம் வாழ்வை மாற்று!

 

நற்சொல் நலந்தந்து பெற்றிடுமே பேறும்
இச்சையிலாது இயம்பப் பெறின்!

 

- நிஹா -

வஹீயை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்பதைப் பிழையாக விளங்கிக் கொண்டு வஹீயையே மறுத்து வரும் மடமைகளைக் களையுங்கள்!

வஹீயை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்பதைப் பிழையாக விளங்கிக் கொண்டு வஹீயையே மறுத்து வரும் மடமைகளைக் களையுங்கள்!

 

வஹீயை மட்டும் பின்பற்றுதலை உலகில் எந்த முட்டாளும் மறுக்கப் போவதில்லை.   வஹீயில் மறைந்துள்ள விடயங்கள் அனைத்தையும் அனைவரும் முழுமையாக அறிந்து விடவில்லை. காலத்துக்குக் காலம் தன்னை விரித்து உலகின்  மாற்றத்தை ஏற்பதற்குத் தயார் நிலையிலுள்ள குர்ஆனை, அதன் கருத்தை அறிந்தோர் உலகில் இல்லை.  அன்றைய நிலையில் அறிந்தோர் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஞானம் பெற்றவர்கள் அன்றைய நிலையைத் தாண்டி, அதற்கப்பாலும் ஓரளவு அறிகின்றனர். அதனால்தான் அறிவாளிகளுக்கொல்லாம் அறிவாளிகள் உணள்ளனர் என இறைவன் கூறுகின்றான்.

 

இந்த உண்மையை வெளிப்படுத்துவதே, நீர் அறியாதவராக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.  இவை வஹீயில் கூறப்பட்ட விடயங்கள் என்பதை மறந்துவிடலாகாது. இதனையும் விளங்காதவர்களைக் குறிப்பிட்டுத்தான், விளக்கத்தைக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என அல்லாஹ் கூறியிருப்பது. இதற்கும் விளக்கம் பெறாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என நாங்கள் குர்ஆனைப் பார்த்து விட்டோம், அதன்படிதான் எல்லாம் செய்வோம் என வீம்பு பேசிக் கொண்டிருப்போர், குருடர்களாகவும், செவிடர்களாகவும் குர்ஆன் என்ற வஹீயில் வீழ்ந்து கிடப்போர்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. Continue reading

Quran Kural! குர்ஆன் குறள் !

குர்ஆன் குறள்

 

விரித்திடுவான் நெஞ்சத்தை இஸ்லாத்தின் பக்கல்
விரும்பிடில் காட்டிட வழி! 6:125

 

பேசானே அல்லாஹ் மறைவிலிருந்தன்றி யாருடனும்
பேசுவனே வஹீமூல மாய்! 42:51

 

பயந்திடில் துன்பம் பயணத்தில் பகைவரால்
இயம்பினான் தொழுதிட சுருக்கி! 4:101

 

நாலு நூற்றுமூனு விளக்கிடுதே நன்றாக
தொழுகையும் நிலைநிறுத்தலும் வேறு! 4:103

 

பேராசை இரக்கம் மூமின்களில் கொண்ட
சீராளர் கிருபை நபி! 9:28

 

 
- நிஹா -

சாத்திரம் – சூத்திரம் – தோத்திரம் – காத்திரம்.

சாத்திரம் – சூத்திரம் – தோத்திரம் – காத்திரம்.

 

 

சாத்திரம் தந்தவன் அவனே சகல
பாத்திர மான பரமனும் அவனே!
ஆத்திரம் அவசர மின்றி அவனை
தோத்திரம் செய்து காண்பது கடனே!

 

சாத்திரம் அறிவது கடனே வெறும்
சாத்திரம் அறிவதால் பயனேது மகனே!
காத்திரமா யறிந்திடு உன்னை தேறும்
சாத்திரம் அதுவன்றோ நீ காணே!

 

சத்திரம் போன்று தங்கிடும் இவ்வுலகில்
சத்தியமானவனைக் கண்டிடேல் நீயும்
நித்திய வாழ்வான மறுமையில் காயும்நரகில்

அந்தகனாய் நீ அழிவது நிஜமே!

 

- நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

 தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 27:16

சுலைமான் தாவூதுக்கு வாரிசாக ஆனார். “இன்னும் மனிதர்களே! பறவையின் மொழியை நாங்கள் கற்றுக் கொடுக்கப்படுள்ளோம். அனைத்துப் பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளோம். நிச்சயமாக இதுதான் மிகத் தெளிவான பேரருளாகும்.“ என அவர் கூறினார்.

- நிஹா -

 

Al Quran 27:16

 

And Solomon wasDavid’s heir.  He said, “O ye people! We have been taught the speech of birds, and we have been given of every thing. This is indeed grace manifest”

 

- niha -

தொழுகை பற்றிய மனோஇச்சைகள் – குர்ஆனிய சிந்தனையில்….

தொழுகை பற்றிய மனோஇச்சைகள் – குர்ஆனிய சிந்தனையில்….

 

தற்போது தொழுகை பற்றிப் புது விளக்கம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்பாவி முஸ்லிம்கள் தாம் செய்வதறியாது திகில் பூண்டில் மிதித்தவர்களாக உள்ள நிலையில், உலமாக்கள் எனக் கூறிக்கொள்வோரும் அது பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பது, தற்போதைய புது விளக்கமே சரி என்ற தோற்றப்பாடைக்கூட ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. மஸ்ஜிதுகள்கூட கட்டப்பட்டு, அங்கு ஒருவரைச் சம்பளத்திற்கு வைத்து, தொழுகை என்று எதையோ செய்து கொண்டு, மார்க்கத்தை விற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்றவாறெல்லாம் முகநூலில், தங்கள் மனம்போன போக்கில்,  மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண !

 

அல் குர்ஆன் 6:90

அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ் நேர்வழியில் நடத்தினான். ஆகவே, அவர்களுடைய நேர்வழியை நீரும் பின்பற்றுவீராக! இதற்காக உங்களிடம் எவ்வித கூலியையும் நான் கேட்கவில்லை. இது அகிலத்தாருக்கு உபதேசமே யன்றி வேறில்லை என்று கூறுவீராக! ( தெளிவிற்காக முன்னுள்ள வசனங்களைப் பார்க்க)

Continue reading

Quran Kural குர்ஆன் குறள்

குர்ஆன் குறள்

 

பயமும் கவலையும் இறைவனைப் பற்றின்
நயமுற அமையும் வாழ்வும்!

நியாயமும் நீதியும் நிலைபெற நிலத்தில்
நாயனின் வழி பேணு!

Continue reading

நற் சிந்தனை 32

நற் சிந்தனை 32

 

பதவிகளால் சிலர் புகழ் அடைவர். பதவிகள் சிலரால் புகழ் அடைகின்றது. – வழக்கிலுள்ள மொழி

இது முற்றிலும் உண்மைதான். அப்படி நடந்த வரலாறுகளும் பதிவாகியே உள்ளன. அதற்காகப் பல உதாரணங்களையும கூறவும் செய்யலாம். அது இன்றைய துர்ப்பாக்கிய நிலையை வெளிப்படுத்தப் போவதில்லை. அதனால், இன்றைய உலகில், சற்று இதனை  அலசி ஆராய்ந்து பார்ப்போமானால், பதவியால் சிறுமை அ்டைந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்படுகின்றது.

அது போன்றே, பதவிகள் சிலரால் புகழ் அடைந்ததும் உண்மைதான், ஆனால், சில பதவிகளே, சிலரால், ஏன் இந்தப் பதவிகள் உருவாக்கப்பட்டன, இவைகளை ஒழிக்காவிடில் உலகே உருப்படாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ள நிலைமையே இன்று எங்கனும் காணப்படுகின்றது. அதனால்தான், இன்று, இந்நாட்டில் ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் அனைத்துப் பாலாரிலும் இருந்து வலுப்பட்டு, வெளிப்பட்ட வண்ணமுள்ளது.

 

உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகி விடாது. – ஊர்ப் பழமொழி

ஊர்க்குருவி பருந்தாகிவிட முடியாது என்பதற்காகப் பயந்து, விரக்தியடைந்து, படுத்துறங்கிடக் கூடாது. அது இயற்கை நமக்களித்த கிருபை. உயரப் பறப்பதால் பருந்து ஒரு போதும் பெருமை பெற்றுவிடுவதில்லை. ஆனால், ஊர்க் குருவி அதே செயலைச் செய்யும் போது அது பெருமை பெறுகின்றது. சாதனையாகின்றது. அனைவராலும் மதிக்கப்படுகின்றது. அந்த உயர்ச்சியிலும் பணிவைப் பேணி நடந்தால், பருந்தைவிட உயர்ந்த ஸ்தானத்தையும் அடைந்து விடலாம். இது, முன்னைய கருத்தில், மோசமான நிலையை அடைந்தவர்கள் பெற்றுக் கொள்ளும் பேறாக ஆகிவிடும்.  

 

ஒரு மனிதன் தன்னுடைய செயல்களாலே பெரிய மனிதன் ஆகிறான், அவன் அமரும் பதவியில் இல்லை. காகம் பெரிய மலையில் மேல் அமர்ந்தாலும் கருடன் ஆகாது . – அர்த்த சாஸ்திரம்

 

மேற்கண்ட தத்துவம்: ஒன்று, செயல்களால் பெரிய மனிதன் ஆகின்றான் என்பதும், இரண்டாவது, பெரிய மனிதனாவது அமரும் பதவியில் இல்லை என்பது. இங்கு செயல்களால் பெரிய மனிதன் ஆகுபவன் பெருமை பெறுகின்றான். அதேவேளை, பதவியால் பெரிய மனிதன் ஆகி கடமையைச் செய்யும் போது பதவிப் பெருமையைக் காத்து விடுகின்றான். அதற்கு மேலும், நற்செயலைச் செய்யும் போது தனக்கும் பெருமையைப் பெற்றக் கொள்கின்றான். இது ஊர்க் குருவியின் நிலையை ஒத்ததாகக் கொள்ளலாம். அதனைவிட இன்னொரு படி, காகம் கழிவைத் தின்று அழுக்கை ஒழிக்கும் உயர் பணியையும் செய்வதன் மூலம் மனிதருக்கும், இயற்கைக்கும் தனது பங்கை ஆற்றி விடுகின்றது. ஆக காகம் கருடன் ஆக முடியாவிடினும், தனது பண்புகளுடன், கருடனின் பண்புகளையும் வெளிப்படுத்தி, கருடனிலும் உணர்ந்து விடுகின்றது.

 

மனிதருள் மிருக குணமும், மனித குணமும், தெய்வாம்சமும் இரண்டறக் கலந்தே உள்ளன. வெளிப்படுத்துவதில்தான் நமது பெருமையும் சிறுமையும் தங்கியுள்ளது.

இது அனைத்திலும் சற்று வித்தியாசமானது. மனிதன் தன்னிலையில் இருந்து, பிறழ்ந்து மிருக நிலையை வெளிப்படுத்தி விடாது, மனிதனாகவும் தனது கடமைகளை, தனக்கு, தன் குடும்பத்திற்கு, தன்னைச் சுற்றி உள்ளோருக்கு, தான் சார்ந்த சமூகத்திற்கு, நாட்டுக்கு, இந்த உலகுக்கும் செய்து வருவானாயின் அவன் அமரத்துவம் பெற்று, மனித தெய்வமாகி விடுகின்றான். இவை அனைத்திலும், ஒழுக்கமும், பணிவும் இன்றேல் அனைத்துமே அபத்தமாகிவிடும். இதனாலேயே, அல்லாஹ் தன் இறுதித் தூதர் முஹம்மது ஸல் அவர்கள் பற்றிக் கூறும் போது,  அவர்கள், ”உயர் குணத்தின் உன்னத நிலையில் இருக்கிறார்” என்று கூறியுள்ளான். ஆதலால், அவர் உலகுள்ள வரையும் வாழ்ந்து கொண்டிருப்பார். அதற்குப் பின்னரும் அவர் புகழ் உயர்ந்தே நிற்கும்.

 

- நிஹா -