குர்ஆன் குறள்

கடல்மையும் தீர்ந்திடும் கலிமத்தி ரப்பை எழுதிட
மறுகடலும் சேர்ந்தே ஒழியும் 31:27

 

நேர்வழியில் செலுத்துதலே நன்மைக்கான கூலியென
சீர்பெறக் கூறுவனே ஹக்கை! 6:84

 

நேர்வழியில் செலுத்திவிட ஓர்வழியும் கூறுவனே
பார்புகழும் நன்மையே அது! 6:84

 

செலுத்திடுவான் அல்லாஹ் கூலியாய் நேர்வழியில்
செய்தோர்க்கு நாளும் நன்மை ! 6:84

 

திட்டிடாதீர் அவரழைப்போரை அல்லாஹ்வை அன்றி
திட்டுவரே வரம்புமீறித் தனை! 6:108

 

-நிஹா -