குர்ஆன் குறள்

பேசிடில் நன்மை பயபக்தியுடன் இரகசியம்
பேசிடேல் அல்லாதன யாண்டும்! 58:9

அகப் பார்வையுள்ளோர் பெற்றிட படிப்பினை
உகப்பாக 59:2 நினை!

துதிக்கின்றன அல்லாஹ்வை ஊர்வன வானம்பூமியில்
விதிகாண ஹஷா ஒன்று!

செல்வந்தர் மத்தியில் சுற்றிவர மட்டுமல்ல
செல்வம் எத்தியுள்ளான் 59:7இல்!

எவர்மானம் காக்கப்பட்டதோ உலோபத்தி லிருந்து
அவர்தாம் வெற்றியாளர் அறி!

– நிஹா -