Monthly Archives: August 2014

Quran Kural !

குர்ஆன் குறள்

பேசிடில் நன்மை பயபக்தியுடன் இரகசியம்
பேசிடேல் அல்லாதன யாண்டும்! 58:9

அகப் பார்வையுள்ளோர் பெற்றிட படிப்பினை
உகப்பாக 59:2 நினை!

துதிக்கின்றன அல்லாஹ்வை ஊர்வன வானம்பூமியில்
விதிகாண ஹஷா ஒன்று!

செல்வந்தர் மத்தியில் சுற்றிவர மட்டுமல்ல
செல்வம் எத்தியுள்ளான் 59:7இல்!

எவர்மானம் காக்கப்பட்டதோ உலோபத்தி லிருந்து
அவர்தாம் வெற்றியாளர் அறி!

– நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 22:19

இவ்விரு வழக்காளிகளும் தங்களது ரப்பின் விஷயத்தில் தர்க்கம் செய்கின்றனர். ஆகவே, நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு நெருப்பினால் ஆன ஆடைகள் வெட்டப்பட்டுள்ளன. கொதித்திடும் நீர் அவர்களது தலைகளுக்கு மேல் ஊற்றப்படும். Continue reading

நற்சிந்தனை 19 பாதுகாவலர்களைப் பின்பற்றலாமா!

நற்சிந்தனை 19

பாதுகாவலர்களைப் பின்பற்றலாமா!

மனித வாழ்க்கையில் பின்பற்றல் என்பது, நம்மோடு இரண்டறக் கலந்த ஒரு செயற்பாடாகவே உள்ளது. ஐந்தறிவின் மூலம், இயற்கையிடம், மனிதரிடம், இன்ன பிற உயிரினங்களிடம் இருந்து பெற்றவைகளைப் பின்பற்றுபவனாகவே மனிதன் இருந்து வந்துள்ளான். அந்த பின்பற்றல்கள் மனிதனைச் சரியான  வழியில் செலுத்தி இருக்கவில்லை. தனது சக்திக்கு மேற்பட்டவற்றை தெய்வமாகக் கருதிய நிலையும் இப்பின்பற்றலின் பெறுபேறாகவே அறிய முடிகின்றது. Continue reading

அறிந்திட சில …..

அறிந்திட சில …..

 

பாரை தகர்த்திடும் புகுந்தே வேர்!
போரை அழித்திடும் வலிந்தே போர்!

போனால் வராது மானம்
போனாலும் வருமே இணையம்!

பேனா தருவது இன்பம்
பேனால் வருவது துன்பம்!

தானாய் விரிந்தால் மலர்
வீணாய்ப் போமே விரித்தால்!

வெட்டத் தளிரும் சேட்டமாய் மரம்
விட்டால் தொலையும் வேகமாய் பட்டம்!

பானை வனைந்திட களிமண் தேவை
வீணை வடித்திட பெருமரம் தேவை!

 

- நிஹா -

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 72:23

அல்லாஹ்விலிருந்து எத்தி வைப்பதையும், அனின் தூதுச் செய்திகளையும் தவிர எவர் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்வாரோ, நிச்சயமாக அவருக்கு நரக நெருப்புண்டு. அதில் அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பர். Continue reading

அறக் கவிதை!

ஒழுக்கம் 2

 

மேலும் அறிய சாலும் லிங்க்:  http://factsbehind.net/wp/?p=1259

 

வள்ளுவப் பெருந்தகை 
தெள்ளிதிற் கூறினார்
ஒழுக்கம் விழுப்பம் தரலால் அது
உயிரினும் ஓம்பப்படும் என்று!

 
அல்லாஹ் தன் அருள் மறையில்
சொல்லால் தன் தூதரைப் புகழ்ந்தான்
நீர் உயர் குணத்தின் உன்னத
நிலையில் உள்ளீர் என்று!

 
ஒழுக்கமே மனிதனைத்
தாழவும் வைத்திடும்
வாழ்விலும் உயர்த்திடும்
வையகமும் வியந்திட!

 
ஒழுக்கமில்லா அறிஞனும்
இழிவடைவான்
ஒழுக்கமில்லா வீரனும்
அழிவுறுவான்!

 
அறிவு அந்தஸ்தில்லாவிடினும்
வீரம் விவேகமில்லாவிடினும்
விரும்பப்படுவான் அனைவராலும்
ஒழுக்கமுடையவனாயிருப்பின்!

 

 

- நிஹா -

 

மேலும் அறிய சாலும் லிங்க்:

http://factsbehind.net/wp/?p=1259

 

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

உங்கள் பொருள்களிலும், உங்களது ஆத்மாக்களிலும் நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். மேலும் உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களில் இருந்தும், இணை வைத்துக் கொண்டிருப்பவர்களில் இருந்தும் அதிகமான நோவினையை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். பொறுமையை மேற்கொண்டும் பயபக்தியுடன் நீங்கள் இருப்பீர்களாயின், நிச்சயமாக அதுவே காரியங்களில் உறுதியானதில் நின்றுமுள்ளதாகும்.

- நிஹா –

Continue reading

அறிந்திட சில …

அறிந்திட சில ….

இருந்தால் கொல்வது இயற்கை உபாதை
இழந்தால் வருவது எய்ட்ஸ் தரும் உபாதை!

உய்யும் வழியை மெய்யினில் தேடு
வையம் வாழ்த்தும் வருமே வீடும்! Continue reading

நற்சிந்தனை 18

நற்சிந்தனை 18

முன்னும் பின்னும் பொய் சேர்த்திட முடியாத உண்மை!

இவ்வுண்மை, குர்ஆனிய வசனத்திற்குரியது என்பதால், அவ்வசனத்தில் இருந்தே இச்சிறு ஆக்கத்தைத் தொடரலாமென நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்!

41:42 இதற்கு முன்னும், இதன் பின்னும், பொய் வந்து சேராது. தீர்க்க ஞானத்திற்கும் புகழுக்கும் உரியவனிடமிருந்து இறக்கப்பட்டுள்ளதாகும்.

இவ்வசனத்தில் நேரடியான கருத்தும் மறைவான வேறு கருத்துக்களும் உள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது. அறியக் கூடியதான கருத்து வாசிப்போருக்கு விளங்கி இருக்குமாயினும், அதனைச் சொல்லிச் செல்ல நினைக்கிறேன். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம் தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 32:02

தன்னுடைய ரப்பின் வசனங்கள் நினைவுபடுத்தப்பட்டால், அதன் பின்னர் அவற்றைப் புறக்கணித்து விட்டவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்! நிச்சயமாக நாம் இக்குற்றவாளிகளைத் தண்டிப்பவர்கள் ஆவோம்! Continue reading