கடமை

 

கடமை என்ற மூன்று எழுத்துள் அடங்கும் வார்த்தை, பிரபஞ்சம் அளவிற்குப் பரந்து விரிந்தது. அதனை விவரிக்கப் புகின் நம் அறிவும், திறனும், காலமும் இடங்கொடா. வாசிப்போரும் மனத்திலிருத்திக் கொள்ளார். நன்றாக எழுதப்பட்டுள்ளது என்ற விமர்சனத்தோடு சிந்தனையிலிருந்து விடைபெற்றுக் கொள்ளும்.

உலக கடமைகள், இறை கடமைகள், குர்ஆனியக் கடமைகள், அன்றாடம், அடைவு வரை, வாரமொரு முறை, வருடமொரு தடவை, வாழ்வில் ஒரு தரமாவது செய்ய வேண்டியன, நம் குடும்பத்துக்கு, நம் உறவினருக்கு, நம் சமூக கத்துக்கு, நம் நாட்டுக்கு, உலகுக்கு, மனித குலத்துக்கு, மறுமைக்கு, இல்லாதோருக்கு, இயலாதோருக்கு, உள்ளவர்கள் செய்ய வேண்டியன, எழுதப்பட்ட கடமைகள், எழுதப்படா கடமைகள், தார்மீகக் கடமைகள், எதிர்பார்ப்பற்ற கடமைகள் என நீண்ட பட்டியலையே தரலாம். Continue reading