தெரிந்து தெளிந்திட சில….

 

அடக்கம் ஆல விதை போன்றது
தொடக்கம் முடிவை நோக்கிச் செல்வது
முடக்கம் வரக் கூடாதது
தடக்கம் தெளிவின்மையால் விளைவது
திடுக்கம் பயத்தின் வெளிப்பாடு
நடுக்கம் உடற் சூட்டை வேண்டுவது
படுக்கை சுகத்தை அளிப்பது
உடுக்கை உட‌லைப்பேணுவது
வடுக்கல் வீரத்தை வெளிபபடுத்துவன
இடுக்கண் களையப்பட வேண்டியது
கடுக்கண் காதில் அணிவது
ஒடுக்கம் உயிரை உய்விப்பது

 

- நிஹா -