இன்றைய உலகில், கல்வியின் போக்கை அவதானிக்கும் எவரும் மக்கள் தேவையினையே கருத்திற் கொண்டு பாடத்திட்டங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். ஆரம்ப காலங்களில் ஓரிரு துறை தவிர்ந்த அனைத்தும் பொதுக் கல்வியாகப் கற்பிக்கப்பட்டன. கற்கப்பட்டன. இந்தவகைக் கல்வி பெற்றவரிடமிருந்தே எல்லா வேலைகளும், சேவைகளும் பெறப்பட்டன. இதனால் உரிய, எதிர்பார்த்த பயன்பாடு அமைவதில் பல்வேறு தடைகளும் தடங்கல்களும், இலக்கை எட்ட முடியா நிலைகளும் இனங் காணப்பட்டன. பின்னர் அவ்வத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அவர்தம் துறைசார் பயிற்சிகள் தொழில் செய்யும் காலங்களின் போதே வழங்கப்பட்டன. (தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக ஆடைத் தொழில் போன்ற ஒன்றிரண்டில் இந்நடைமுறை இன்னும் பின்பற்றப்படுகின்றது.) பின்னர் படிப்படியாக இந்நிலைமாறி அவ்வவ் துறைசார் கல்வி முறைகள் ஓரளவு அறிமுகமாயின.

இவைகூட முழுஅளவில் அமையாததால் சிறந்த துறைசார் பணியாளர்களைப் பெறுவதில் முன் அநுபவம் கோரப்பட்டது. இந்நிலை பிரச்சினைகளுக்குத் தீர்வாகவல்லாமல் பிரச்சினையாகவே உருப்பெற்றது. பணி வழங்கப்படாது ‘பணி முன்னனுபவம்’ பெறுவதென்பது நடைமுறைக்கு ஒவ்வாததாகக் காணப்பட்டது. பின்னர் பாடசாலை விட்டோரைத் தெரிவுசெய்து ‘தொழில் முன்பயிற்சி’  Apprenticeship வழங்கப்பட்டது. அப்பயிற்சிகளின்போது சிறு ஊதியமும் வழங்கப்பட்டதுடன், அவ்வகைப் பயிற்சி பெற்றோருக்கே தொழில் தர தொழில் முகவர்கள் முன்வந்தனர்.

இதென்ன தலையங்கத்துக்குச் சம்பந்தமில்லாது கட்டுரை போகின்றது என்ற கேள்வி உங்கள் மனதை அரிப்பதைக் காண்கின்றேன். இதை நான் எழுதியது நடைமுறைச் சாத்தியத்தின் அவசியம், அவசரம் போன்றவைகளின் முக்கியத்துவத்தை மனதிற்குக் கொண்டு வந்து. அதன் மூலம் கட்டுரையை விளங்கிக் கொள்வதை இலகு படுத்துவதுமேயாகும். Continue reading