Monthly Archives: October 2013

பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்…

மேற்கண்ட தலைப்பு அருளாளனனின் திருவசனம். புனித குர்ஆன் 2:153 ‘முஃமின்களே! நீங்கள் பொறுமையைக் கொண்டும், தொழுiகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்வாஹ் பொறுமையாளருடன் இருக்கிறான்.’ என்ற வசனமேயாகும். பொறுமையையும் தொழுகையையும் கொண்டு உதவி தேடுங்கள் என்ற இந்த வசனம் எனக்குப் புரியாத புதிராகவும், பின்னர் முரண்பாடு போலவும் தோற்றம் அளித்தாலும், அல்லாஹ் மீதும் அவனது அருள்மறையின் மீது கொண்ட அளப்பரிய நம்பிக்கையும், வல்ல அல்லாஹ்வின் கருணையும் இருந்ததனால், பொறுமை என்றால் என்ன ? தொழுகை என்றால் என்ன? என்பதை அறியும் ஆவலும் தொடர்ந்து முயற்சியும் உண்டானது. அதன் பயனே இவ்வாக்கத்தின் வெளிப்பாடு. தொடங்குமுன் அருளாளன் அன்புடையோனாகிய அல்லாஹ் சுபுஹானஹுவதஆலாவின் பாதுகாப்பையும், வழிகாட்டையும் வேண்டுகிறேன். Continue reading

10 Principles for Peace of Mind

1. Do Not Interfere In Others’ Business Unless Asked:

Most of us create our own problems by interfering too often in others’ affairs.
We do so because somehow we have convinced ourselves that our way is the best way, our logic is the perfect logic and those who do not conform to our thinking must be criticized and steered to the right direction, our direction.
This thinking denies the existence of individuality and consequently the existence of God..
God has created each one of us in a unique way.
  Continue reading

குர் ஆன் குறள்

 

1. இல்லைஇலாஹு அல்லாஹ் வையன்றி வேறென 
சொல்லுக சொல்லால் மனத்தால்
2. இல்லை இலாஹு அல்லாஹ்வை யன்றிவேறு
சொல்லை அறிந்து ணர்க.
3. கூறியநற் கலிமாவை ஐயறஅறிந் துணர்ந்து
கூறுக சாட்சி யத்தை
4. வாழ்த்துது வணங்குதிறை விண்மண்ணி லனைத்தும்
தாழ்த்தியே தமது தலை – 22:18
5. அனைத்தும் பரப்புது ஆதியவன் புகழை
அணுமுத லகண்டம் வரை Continue reading

சிறுநீரகக் கல் தொல்லையில் விடுதலை பெற இயற்கை வழி…. அனுபவ உண்மை !

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. Continue reading

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. Continue reading

கற்றுக் கொண்ட பாடங்கள்.

( ( இது ஒரு மறுபிரசுரம்.  வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 23ஆவது வருட அவலத்தினை நினைவுபடுத்துவதற்காக மறுபிரசுரமாகின்றது. ) )

ஒவ்வொரு செயலுக்கும் சமமானதும் எதிரானதுமான தாக்கம் உண்டு என்பது, விஞ்ஞான ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதியே. அதனை வல்ல நாயன் தன் அருள்மறை குர்ஆனில் அழகுற எடுத்தியம்பிக் கொண்டுள்ளான். ஒவ்வொருவரும் இப்பூவுலகில் தாங்கள் தங்கள் செயல்கள் மூலம் சம்பாதித்துக் கொண்டதற்கு இணங்க மறுமையில் கூலி கொடுக்கப்படுவார்கள். அவர்கள் செய்ததில் ஒரு அணுவேனும் கூட்டப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது. யாரும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் என்பதே. அதன்படி நாம் அணுவளவு நல்லது செய்தால் அந்தளவு நன்மையையும், அல்லது அணுவளவு தீமை செய்தால் அந்தளவு தீமையையும் அடைவோம். இதுவே இஸ்லாமியர் கொண்டுள்ள நம்பிக்கைகளில் ஒன்று. இது இஸ்லாம் பற்றி எழுதப்படும் கட்டுரையல்ல. மாறாக மேற்கண்ட விதி குர்ஆனியக் கருத்தே என்பதையும், அது விஞ்ஞானிகளால்கூட ஏற்கப்பட்டுள்ளது என்பதையும் முன்வைப்பதே. தலைப்பிற்கு வலுவூட்டுவது. Continue reading

ஆடைகள் அன்றும் இன்றும்

0 அன்று மானத்தைக் காத்து மேன்மையடைந்த ஆடைகள,
இன்று தானத்தைக் காட்டி ஈனமடைகின்றன.

0 அன்று ஆடைகள் அலங்காரத்தைத் தந்தன,
இன்று அவைகளே அசிங்கத்துக்காளாகின்றன. Continue reading