Daily Archives: September 28, 2013

உலக மாற்றங்களுக்கும், விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளுக்கும், மனித நாகரிகத்துக்கும் ஈடு கொடுத்துக் கொண்டிருக்கின்றதா புனித குர்ஆன் !

உலக மாற்றங்களுக்கும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும், மனித நாகரிகத்துக்கும் ஈடு கொடுத்துக் கொண்டிருக்கின்றதா புனித குர்ஆன் !

அசைவற்று, மாற்றங்காணாத எப்பொருளும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை. அசையாது என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மலைகளும் தன்னில் மாற்றத்தை ஏற்று, ஏற்படுத்திக் கொண்டிருப்பனவே! அசையாதது போன்று தோற்றமளிக்கும் உலகம் உட்பட அனைத்துக் கிரகங்களும், நட்சத்திரங்களும் அசைந்து கொண்டும், சுழன்று கொண்டும், பயணித்துக் கொண்டும், வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டும் இருக்கின்றன என்பதை ஓரளவாவது மக்கள் தற்போது அறிந்தே இருக்கின்றார்கள்.

ஏன் வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா கூட ஒவ்வொரு ஷணமும் தான் ஓர் மாட்சியில் இருப்பதாகக் கூறுகிறான். மேற்கண்ட உண்மைகளைக் கூட, அல்லாஹ் தன்மாமறையில் மிக நாசூக்காக பல்வேறு வசனங்களில் கூறியேயுள்ளான் என்பதே இந்த தலைப்பிற்கு விடையாக அமையும். அதற்கு மேலும், அனைத்தும் தாம் விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வைத் துதி செய்து கொண்டிருக்கின்றன. சிரம் சாய்க்கின்றன. அவற்றின் துதியை நீங்கள் விளங்கிக் கொள்கிறவர்களாக இல்லை எனக் கூறும் குர்ஆனிய வசனமே இதற்குச் சான்றாகும். விஞ்ஞானமும் அதனை ஏற்றுள்ளதை, அண்மைய கண்டு பிடிப்புக்களான Big Bang, Theory of Crunch, Tachyon ( Hypothetical particle that travels faster than the light travels ) போன்றவை உண்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. Continue reading

சித்த மருத்துவக் குறிப்புகள்

சித்த மருத்துவக் குறிப்புகள்

1.நெஞ்சு சளி:
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2.தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3.தொண்டை கரகரப்பு:
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4.தொடர் விக்கல்:
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5.வாய் நாற்றம்:
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். Continue reading

மனிதர் மறதியில் புறக்கணித்தவர்களாகவே உள்ளனர்

மனிதர் மறதியில் புறக்கணித்தவர்களாகவே உள்ளனர்

அல்குர்ஆன் 21:1 ” மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு நெருங்கி விட்டது. அவர்களோ மறதியில் புறக்கணித்தவர்களாகவே உள்ளனர்.“

இது ஓர் அபாய அறிவிப்பு. ஆம் மறைவான எச்சரிக்கையுடன் கூடியது. மறதியில் உள்ளவர்கள் நாம் என்ற நம் குறையைச் சுட்டிக்காட்டி, நாம் மறந்த எதையோ ஞாபகப்படுத்துமாறு மனிதரைத் தூண்டிக் கொண்டிருக்கும் பண்புடன், தனது கிருபா கடாட்சத்தை வெளிப்படுத்தி நிற்கும் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலாவின் நெருங்கிவிட்ட மறுமை யையும். அங்கு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டி இருப்பதையும் பறை தட்டும், அருளும் பொருளும் பொதிந்த அற்புதமான அழைப்பு.

மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு நெருங்கிவிட்டது எனக் கூறும் முறை, இவ்வுலகு சீக்கிரம் அழியப் போகின்றது என்ற அபாய அறிவிப்பைச் செய்கின்றது. மறுமையில் நடக்கவிருக்கும் கேள்வி கணக்கிற்கு நம்மிடம் என்ன இருக்கின்றது? என்ற கேள்வியை எழுப்பிய வண்ணம் உள்ளது. நம்மிடம் கேட்கப்படவுள்ள கேள்வியும், தீர்க்கப்படவுள்ள கணக்கும்தான் என்ன? Continue reading

ஈமானற்ற தொழுகை ஈடேற்றம் தருமா!

ஈமானற்ற தொழுகை ஈடேற்றம் தருமா!

ஒரு மனிதன் இஸ்லாமியனாக ஆவதற்கு ஆறு காரியங்களில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவை அனைவரும் அறிந்தவை. ஆயினும், விளக்கத்துக்காக: அல்லாஹ்வை, அவனது வானவர்களை, அவனது வேதங்களை, அவனது திருத்தூதர்களை, இறுதிநாளை, விதியை, தீர்ப்பை நம்பிக்கை கொள்ள வேண்டும் .

இவ்வாறான விடயங்கள் உண்டு என்பதை அறிவதற்குள்ள ஓரே ஊடகம், அல்லாஹ் நமக்கருளியுள்ள வேதங்களாகும். வேத வெளிப்பாடுகளின் இறுதிக்கால மக்களாக நாம் இருப்பதால், இஸ்லாத்தையே நமக்குரிய வேதமாக அல்லாஹ் தேர்ந்து விட்டதாகக் கூறுகிறான். அதிலேயே நமக்கு விடிவு இருப்பதாகவும், அதல்லாதவற்றால் எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை என்பதையும் தெளிவாகவே தெரிவித்துவிட்டான். காரணம் இறுதி வேதமாகவும், சம்பூரணமான தாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் குர்ஆன் ஆக்கப்பட்டுள்ளதே! Continue reading