Daily Archives: September 23, 2013

முஸ்லிம் அல்லாதோருக்கும் தர்மம் (ஸதக்கா) ஏழைவரி (ஸக்காத்) வழங்கலாமா?

குர்ஆன் வழியில்…

முஸ்லிம் அல்லாதோருக்கும்
தர்மம் (ஸதக்கா) ஏழைவரி (ஸக்காத்) வழங்கலாமா?

நாமறிந்தவரை தர்மத்தை யாருக்கும் வழங்கலாம் என்றவாறும், ஸக்காத் என்ற ஏழைவரியை முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்கலாமெனவும் கருதி முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை, அவர்கள் அவற்றை நடைமுறைப்படுத்திவரும் முறையில் இருந்து கண்டு கொள்ளக் கூடியதாயுள்ளது. இந்த நடைமுறை சரியானதா? முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஏழைவரியில் இருந்து வழங்கலாமா என்பதை குர்ஆனின் அடிப்படையில், உள்ளதை உள்ளவாறு ஆராய்வதே இக்கட்டுரை.

உலக மாந்தரின் உய்வுக்காக இறக்கி அருளப்பட்ட மாமறையில் ஓரவஞ்சகமாக முஸ்லிம்களுக்கு மட்டும் ஸக்காத்தைக் கொடுங்கள் என கருணை நாயன் வல்ல அல்லாஹ் நம்மைப் பணித்திருப்பானா? இக் கேள்வியும் என் மனதைத் துளைத்துக் கொண்டிருந்த கேள்விகளில் ஒன்று. அதனைக் கண்டறிய அவனின் யாப்பு என்ன கூறுகிறது என்பதை யறிய குர்ஆனில் உரசிப் பார்த்த பொழுது பல்வேறு உண்மைகள் கேள்வி களாய் எழுந்து வருகின்றன.

Continue reading

பிழைகளும் சரிகளும்

பிழைகளும் சரிகளும்

பிழைகள் எல்லாம் பிழைகளுமல்ல. சரிகள் எல்லாம் சரிகளுமல்ல. பிழைகளில் சரியுமுண்டு. சரிகளில் பிழையும் உண்டு. பிழைகள் சரியாவதும் உண்டு. சரிகள் பிழையாவதும் உண்டு. பிழைகளாகத் தெரிவதெல்லாம் பிழைகளுமல்ல. சரிகளாகத் தென்படுவதல்லாம் சரிகளுமல்ல. சரியொன்றை இன்னொரு சரி, உண்மைப்படுத்துவது இல்லை. காரணம் இரு சரிகள் ஒன்றில் காணப்படாது. அது போன்று சரியொன்றை இன்னொரு சரி பிழையாக்குவதும் இல்லை. ஒரு சரியை ஒரு பிழை உண்மையாக்கவும் செய்யும், அது போன்று ஒரு சரியை பிழையொன்று பிழையாக்கிடவும் முடியும். சில விதிவிலக்குகளும் உண்டே!

வெளிச்சத்தில் பல நிறங்களில் தோற்றம் தந்த பொருளொன்று, இருட்டில் மறைந்து அல்லது கறுப்பாகத் தோற்றம் தருவதில் பிழை சரி தீர்மானிக்க முடியாததாகி விடுகிறது. இரண்டு நிலைகளிலும் இரண்டு தோற்றங்களும் சரியென்பதும் பிழையான முடிவே! இரண்டு சரிகள் ஒன்றில் காணப்படாது. இவை சர்ச்சையை வளர்க்குமே தவிர உண்மையை அடைய விடாது. Continue reading

மனிதரைப் பாதிக்கும் ஸ்ட்ரோக் – ஒரு பார்வை….

மனிதரைப் பாதிக்கும் ஸ்ட்ரோக் – ஒரு பார்வை….

ஸ்ட்ரோக் என்ற மூளையிலுள்ள கலன்களுக்கு இரத்தத்தால் எடுத்துச் செல்லப்படும் பிராணவாயுத் தடையால் அன்றி பிராணவாயுக் குறைவால் திடீரென ஏற்படும் கலனின் இறப்பால் ஏற்படுவது. இந்த நிலை, எதிர் பாராத விதமாக மூளைக்கு இரத்தம் செல்லும் குழாயில் ஏற்படும் தடையால், அல்லது மூளையின் கலன்களுக்கு இரத்தத்தை எடுத்துச் சென்று பிராண வாயுவால் போஷிக்கும் குழாய்களில் ஏற்படும் திடீர் வெடிப்பு போன்றவையால் உருவாகின்றது.

இந்தத் தாக்குதலின் காரணமாக, நோயாளி பேச முடியாத நிலையை அல்லது ஞாபக சக்தியை இழந்துவிடும் நிலையை அல்லது முழு உடலினதும் ஒரு பக்கம் செயலிழந்து போகும் நிலையை அடையலாம். Continue reading

இஸ்லாமிய பெருநாட்களில் இழுபறிகள்…

பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டமைக்கு,அடிப்படையை விளங்காமையே காரணம்

இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒருவர் அது பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இஸ்லாம் என்ற வாழ்வியல் திட்டம் உலகில் மனிதப் படைப்பு தோன்றிய போதே வேதங்களாகவும் கட்டளை களாகவும், நபிமார்கள், தூதுவர்கள் மூலமாக காலத்துக்குக் காலம் தேவைக்கு ஏற்ப இறைவனால் இறக்கி அருளப்பட்டவையே! இவையனைத்தையும் குர்ஆனின் தாய் எனப்படும் உம்முல் கிதாபில் அல்லாஹ் பதிந்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளான். இறுதியாக அனைத்து வேதங்களில் கூறப்பட்டவையும் தனது இறுதி நபி முஹம்மது ஸல் அவர்கள் மூலம் வெளிப்படுத்தினான். குர்ஆன் அப்படி வெளிப்படுத் தப்பட்ட ஒன்றே தவிர வேறல்ல என்றும் மிகவும் வலியுறுத்திக் கூறி யுள்ளான். நபிமார்களும், தூதுவர்களும் தமக்கு இறக்கி வைக்கப்பட்ட வற்றை வெளிப்படுத்த அவனால் தேர்ந்தெடுக் கப்பட்ட சாதாரண மனிதர்களே என்பதும் அவனது கூற்றே! நபிமார்களோ, தூதுவர்களோ அவர்கள் போதித்த வேதங்களின் உரிமையாளர்கள் அல்லர் என்பதை நன்கு மனத்தில் இருத்திக் கொள்ளல் மார்க்கத்தை அறிவதில் மிக அவசியம் தேவைப்படுவது. அவர்களும் தாம் போதித்த இறை செய்தி களான வேதங்களைப் பின்பற்றியவர்களே என்பதே யதார்த்தம்!

நேர்வழி என்பது அல்லாஹ்வின் வழி என்பதால், இறுதி மார்க்கமாக வெளிப்படுத்தப்பட்டு, இறைவனால் தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமிய வேத நூலான புனித குர்ஆனே அந்தத் தகைமையைக் கொண்டது. அது அல்லாஹ்வின் வழிகளைக் கூறிக் கொண்டிருப்பது. அதனையே நாம் அல்லாஹ் வின் சுன்னா(வழி) என அரபியில் காண்கின்றோம். நான் ஏற்கனவே கூறியது போல் நபிமார்கள் பின்பற்றிய வழி எனப்படும் சுன்னாவும் அல்லாஹ்வின் சுன்னாவே! அல்லாஹ்வை நேசிப்போர் எனது சுன்னாவைப் பின்பற்றுவர் என நாயகம் ஸல் அவர்கள் கூறியிருக் கின்றார்கள் என்றால் அந்த வழி அல்லாஹ்வின் வழியே தவிர வேறு வழியில்லை. நபிமார்களுக்கு என்று தமது சொந்த வழிகள் எதுவு மில்லை.

46:9 – “நான் தூதர்களில் புதுமையானவனல்ல. மேலும், என் தொ டர்பாகவும், உங்கள் தொடர்பாகவும், என்ன செய்யப்படும் என்பதை நான் அறிய மாட்டேன். என்பால் வஹீ அறிவிக்கப்படுவதைத் தவிர நான் பின்பற்றுவதில்லை. மேலும், நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனேயன்றி இல்லை!“ Continue reading