வாழ் குறள்!

 

1. கூடல் இன்பம் நீடித்து நிலைப்பது
கேடிலாக் கூடலிற் காண்!

2. கூடலின் இன்பம் குறைவிலா துயரும்
ஊடிப்பின் கூடும் போது!

3. ஊடலும் கூடலும் உவகையே தரும்
கேடிலா உறவே யானால்!

4. இன்பம் பயத்திடினும் களவாய் வருவது
துன்பம் பயத்து விடும்!

5. நலவே செய்திடினும் களவாய் வரும்பொருள்
அளவிலா துயர் விளைக்கும்!

6. உடுத்திடும் உடையே மறைத்திடா தென்றால்
அடுத்தவர் கண்களை மறைப்பவராரோ!

7. படுத்தவ ரெழுந்தால் பகையிலாத் தூக்கம்
விடுத்தவ ரெழுந்திடேல் மீளாத்துயரம்!

8. சறுக்கலின் தொடர்ச்சி இலக்கினி லுயர்ச்சி
சறுக்கலின் வீழ்ச்சி இடையினில்பெயர்ச்சி!

9. கிறுக்கலின் முடிவு உருக்கலின் அமைவு
கிறுக்கனின் முடிவு வருந்திடும் விளைவு!

10. ஐம்புலனும் பெற்றதனை ஆராய்ந் தின்பமுறல்
ஆறாவ தறிவின் பண்பு!

 

- நிஹா -