பீஜேயின் பிதற்றல்கள்!

 

 

பிறக்கும் குழந்தைகள் முஸ்லிமாகப் பிறப்பதில்லை!

 

 

இஸ்லாம் இனிய மார்க்கம் என்ற பெயரில் ஒரு இணைய நிகழ்ச்சியை பீஜே அவர்கள் நடாத்தி வருவது யாவருமறிந்ததே! அதில் கேள்வி – பதில் என்றொரு பகுதியில் பிறமதத்தவர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்து வருவதும் தெரிந்ததே!

 

அவருடைய பதில்கள் சில வேளைகளில் முற்றுமுழுதாக தனது மனோஇச்சையைக் கொண்டு கொடுக்கப்படுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இது அப்பாவி அந்நிய மதத்தினரையும், முஸ்லிம்களையும்கூட இஸ்லாம் பற்றிய பிழையான கருத்துக்குள் சிக்க வைத்து விடுகின்றது. அண்மையில் அவரது கேள்வி-பதில் நிகழ்வொன்றில், கேட்கப்பட்ட கேள்விக்கு, பதிலாக, ‘பிறக்கும் குழந்தைகள் முஸ்லிமாகப் பிறப்பதில்லை’, ஏன் முஸ்லிம்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்கூட முஸ்லிம்களாகப் பிறப்பதில்லை என்று கூறியிருந்தார்!

 

இது சுத்த வழிகேட்டினை மக்கள் மத்தியில் உருவாக்குவதுடன், இறை நிராகரிப்பாகவும் ஆகிவிடுகின்றது!  இதன்படி, அல்லாஹ், பிறக்கும் குழந்தைகள் அனைத்தையும் நிராகரிப்பாளர்களாக அதாவது முஸ்லிமல்லாதவர்களாகவே படைப்பதாகத் தெரிகின்றது!  இது அல்லாஹ்வின் மேல் பொய்யுரைத்த குற்றத்தை வருவிக்கின்றது! அல்லாஹ்வின் மேல் பழி சுமத்துவது! அல்லாஹ்வின் படைப்பில் குறை காணுவது! இதற்கான ஆதாரத்தை அவரால் குர்ஆனிலிருந்தோ,  ஹதீதிலிருந்தோ காட்ட முடியாது! இது அவரது சொந்த மார்க்கம்!

 

ஆதி மனிதனை அல்லாஹ், பீஜே கூறுவது போன்று, அப்படி முஸ்லிமல்லாதவரகப் படைத்திருந்தால், அவர் ஷைத்தானால் வழிகெடுக்கப்பட்டிருக்க மாட்டார்! ஏனென்றால் முஸ்லிமல்லாதவரை – வழிகேட்டில் இருப்பவரை ஷைத்தானால் வழிகெடுக்க முடியாது என்பதே! மேலும், ஷைத்தானும் குற்றவாளியாகி இருக்க மாட்டான். ஆதாமும், அவரது மனைவியும்கூட சொர்க்க வாழ்விலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள்! அவர்கள் சொர்க்கத்திலும் இருந்திருக்கமாட்டார்கள்! ஆக, இவர்கள் முஸ்லிம்களாக, அதாவது, அடிபணிந்தவர்களாக பிறந்துள்ளார்கள் என்பதே உண்மை! 

 

மேலும், இந்த உலகில் அல்லாஹ் மனிதரைப் படைத்ததே, தன்னையும், அதன் மூலம் தன்னைப் படைத்தவனையும் அறிவதற்காக, தன்னையன்றி வேறு எதுவுமில்லை என்ற உண்மையைப் பறை சாற்றுவதற்காகவே! அந்த நிலையில் படைக்கப்பட்ட மனிதனை அல்லாஹ் முஸ்லிம் அல்லாதவர்களாகப் படைக்கின்றான் என்பது ஒரு முட்டாள்தனமான மட்டரக, விஷமத்தனமான அடிப்படையற்ற, ஆதாரமற்ற கருத்தாகும்!

 

ஷைத்தானால் ஆதம் வழிகெடுக்கப்பட்டார் என்பதிலிருந்து, அல்லாஹ் அவரை முஸ்லிமாகவே படைத்திருந்தான் என்பது உறுதியாகின்றது! மேலும், ஷைத்தானால் வழிகெடுக்கப்பட்டு, பின்னர் மனந் திருந்தி, அல்லாஹ் அவருக்குக் கற்றுக் கொடுத்த வார்த்தைகளைக் கொண்டே தனது பாவத்திலிருந்து கரையேறியுள்ளார் என்பதும், அவரது படைப்பு மட்டுமல்ல அவருக்கு அல்லாஹ்வால்; கற்றுக் கொடுக்கப்பட்டிருந்ததும் நேர்வழியே என்பது மேலும் வலுப்படுகின்றது!

 

மேலும், அல்லாஹ் மனிதர்களை நேர்வழிப்படுத்துவதற்காக இப்புவியில் நபிமாரை, தூதுவர்களை அனுப்பி ஒரே விடயத்தையே திரும்பத் திரும்ப ஞாபகமூட்டி வந்திருக்கின்றான். அந்த வழியில் குர்ஆனில், மனிதப் படைப்பு முஸ்லிமாகவே இருந்தது என்பது பல இடங்களில் வெளிப்பட்டாலும், குறிப்பாக ஒரு வசனம், வெளிப்படையாகவே ஒரு உண்மையை பறை சாற்றி நிற்கின்றது! ‘ஞாபகப்படுத்தி வந்துள்ளான்’ என்ற சொல்லே, எற்கனவே மனிதர்கள் முஸ்லிமாக அல்லாஹ்வை அறிந்து சாட்சி கூறி இருந்த நிலையை வெளிப்படுத்துவதே! ஆம், அதன்படி அவர்கள் அனைவரும் முஸ்லிம்களாக பிறந்து பின்னர் வழிகேட்டில் சிக்கியவர்களே என்பதைக் குறிக்கின்றது!

 

வெளிப்படையாக அல்லாஹ்வால் ஞாபகப்படுத்தப்படும் அந்த வசனம், அல் குர்ஆன் 7:172இல் காணப்படுவது! எவ்வித சந்தேகமுமற்ற மிகத் தெளிவான வசனம்! ‘இன்னும், உம்முடைய ரப்பு, ஆதமின் மக்களாகிய அவர்களது முதுகுகளிலிருந்து, அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்தபோது, ‘நான் உங்கள் ரப்பு அல்லவா?’ (என்று கேட்டான்). ‘ஆம், நாங்கள்  சாட்சி கூறுகிறோம்’ என்று அவர்கள் கூறியதை நினைவூட்டும்.  ஏனென்றால், ‘நிச்சயமாக, நாங்கள் இதனைவிட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்’ என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக’

 

மேற்கண்ட வசனம், மிகவும் குறிப்பாக, படைக்கப்பட்ட உலக மாந்தர் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்பதை மட்டுமல்ல, அவர்கள் அல்லாஹ்வைத் தவிர நாயனில்லை என்று சாட்சி கூறியவர்களாகவே இருந்துள்ளனர் என்பது அப்பட்டமாக சந்தேகத்துக்கு இடமின்றி வெளிப்படுகின்றது!

 

இந்நிலையில், இந்த பீஜே என்பவர், புனித குர்ஆனை வேறு, மொழி பெயர்த்தவராகவும், உலகில் முஸ்லிம்கள் தௌஹீதில் இல்லை எனக் கூறிக் கொண்டு, அதற்காக தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில் ஒரு கட்சியையும் வைத்துக் கொண்டிருப்பராகவும் இருந்து கொண்டு, உலகில் பிறக்கும் குழந்தைகள் முஸ்லிம்களாகப் பிறப்பதில்லை, முஸ்லிம்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்கூட முஸ்லிம்கள் அல்லர் என்ற கருத்தைப் பகிரங்கமாக இலத்திரணியல் ஊடகம் மூலம் தெரிவித்திருப்பது, அவரது உண்மையான முகத்தைக் காட்டுவதாகவே உள்ளது!

 

இவர் இக்கருத்தை வெளியிட்டிருப்பது, அறியாமையால் மட்டுமல்ல என்பதும், தலைக்கனம் ஏறி தன்னைத் தவிர இஸ்லாத்தை அறிந்தோர் இல்லை என்ற நினைப்பில், தான் எதைக் கூறினும் ஏற்றுக் கொள்ள ஒரு மந்தைக் கூட்டம் உள்ளது, அது தனது கருத்தை அச்சொட்டாக ஏற்று, அதனைப் பரப்பும், எதிர்ப்பவர்களைத் திட்டித் தீர்க்கும், அவர்களுக்குப் பட்டப் பெயர் வைக்கும், போட்டிக்கு அழைக்கும், தூற்றும், துன்புறுத்தும் என்றெல்லாம் தெரிந்து வைத்துள்ளமையால்தான் இவ்வாறான நிராகரிப்பை, பொய்யை, இட்டுக்கட்டலை பகிரங்கமாக மேடை ஏற்றிக் கொண்டிருக்கின்றார் என்றே கொள்ள வேண்டியுள்ளது!

 

பீஜேயின் மனோ இச்சைக்கு அப்பாவி மக்கள் பலியிடப்படுகின்றார்கள் என்பதே உண்மை! இஸ்லாம் இனிய மார்க்கம் என்ற பெயரில் ஒரு புதிய, இஸ்லாத்திற்குச் சம்பந்தமற்ற ஒரு சமுதாயத்தை, இஸ்லாம் என்ற பெயரில், இஸ்லாத்தை இருட்டடிப்புச் செய்ய உருவாக்கி வருகின்றாரா என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது.

 

இஸ்லாத்தை அழிப்பதற்காகக் கிளம்பியுள்ள கூட்டங்களில் இது புது வகைத்தா என்ற கேள்வியும் எழும்பாமல் இல்லை! உண்மையுடன் பொய்யைக் கலக்கும் ஒரு பயங்கரவாதி! இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாத்தை அழிக்கும் பணியில் தந்திரமாக ஈடுபடுபவர்! 

 

-     நிஹா  -