எனக்குப் பிடித்தவை !

எனக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பிடிக்கலாம். பிடித்தால் சுவையுங்கள்!

பெண்ணின் பெருமை, அருமையை, உரிமையை, உளப்பாங்கை உய்த்துணருங்கள். இறை படைப்பின், அனைத்தும் மனிதப் படைப்பில். எந்நதப் படைப்பிலும் காண முடியாத, அரிய பெரிய பண்புகள் விரவிக் கிடக்கின்றன. மனித உருவினுள். முடிந்தால் வெளிப்படுத்த முனையுங்கள். உலகே அமைதிப் பூங்காவாக மாறிவிடும். அதுவே இறை நோக்கமும். மறுமையிலும் வெற்றியாளர்களாகி விடலாம். வரவேற்க ஹுருலீன்கள் என்ற பார்வை தாழ்த்திய பருவம் மாறா, கைபடாத கன்னியர் காத்திருப்பர்.

கவிதை

 

யூசுப் – சுலைஹா

 

 

தன்னுடை விலக்கி மெல்லத்
தழுவிட முயலும் காற்றை
மின்னிடை சுலஹைா தள்ளி
மேலுடை சரிப் படுத்தி
கண்ணிடைத் தோன்றா வண்ணம்
கருத்திடை நுழையும் காற்றே
என்னுயிர்க் காதல் வேந்தன்
எழிற் கரம் நீயோ சொல்வாய்!

 
இச் செய்யுளில் கதாநாயகியின் மன உளைச்சல், கற்பு நெறி, மென்மை, தன்மை, கற்பனை, ஏக்கம், வெட்கம், ஒழுக்கம், காதல் போன்ற இன்னொரன்னவை வெளிப்படுகின்றன.

 
எதுகை, மோனை, எளிய தமில் சொல்லாட்சி, கற்பனை, தான் காதலனுக்க மட்டுமே சொந்தமானவள் என்ற ஒழுக்க நெறியும் கற்பு நெறியும் வழுவாது, விரசமின்றித் தன் காதலை வெளிப்படுத்தும் ஒரு வனிதையைப் படமாக்கியுள்ள கவிஞனின் திறனை நான் கண்டு வியப்புறுகின்றேன்.

 
விரக தாபத்தில் தன் காதலனின் வரவை, அணைப்பை, தழுவலை எதிர்பார்த்திருந்த ஒரு அபலையின் எதிர் பார்ப்பிற்கு மாறாக, அச்சமயத்தில் மென்காற்று, அவளுடைய மேலாடையை விலக்க முனைகின்றது. அவள் மேனி அத்துனை மென்மையும், ஸ்பரிச தன்மையும் கொண்டுள்ளதால், அக்காற்று உடலைத் தழுவு முன்னரே, உணர்ந்து, தன் ஆடையை விலக்கிய காற்றைத் தள்ளிவிட்டு, தன்னுடையைச் சரிப்படுத்திக் கொண்டு, தன் ஆதங்கத்தையும். ஆத்திரத்தையும் காற்றிடம் வெளிப்படுத்துகின்றாள்.

 

 

என் அனுமதியின்றி என் உடலைத் தழுவும் அதிகாரம், உரிமை என் காதலனுடைய கரத்துக்கு மட்டுமே உண்டு என்பதை வெளிப்படுத்தி ஒரு செய்தியையும் மகளிர் குலத்துக்கு விடுக்கின்றாள். மற்றவர்களையும் எச்சரிக்கின்றாள்.

 

 

- நிஹா -