விரலுக்கு அழகையும், பலத்தையும், பாதுகாப்பையும் தரும் நகம்!

நமது விரல்கள் அழகை, பலத்தை, பாதுகாப்பை பெற்றுக் கொள்ள வழிசமைத்துக்கொண்டிருப்பன நமது நகங்களே! நகமில்லாத நிலையை சற்று கற்பனை பண்ணிப் பாருங்கள்! இதற்கு மேலும். கிள்ள, சொறிய, வராண்ட, கீற, கிழிக்க, சுரண்ட என பல்வேறு தேவைகட்கும் நகங்களே நமக்கு உதவியாக இருக்கின்றன!

அப்படியான நகத்தைக் கண்ணே போன்று காப்பது நமது கடமையாகக் கொள்ள வேண்டும். நன்மை விளைத்திடும் நகமே நமக்கு சில தொல்லைகளுக்கும் காரணமாக அமைந்து விடுவதையும் இங்கு கூறாமலிருக்க முடியவில்லை. அழுக்குகளையும், கிருமிகளையும் தக்க வைத்துக் கொள்ளும் சாதனமாகவும் இருப்பதால், அதுவே நமது உணவுடன் சேர்ந்து உடலுட் புகுந்து கேடு விளைக்கும் காரணியாகவும் இருக்கின்றது.

ஆதலால், நமது நகத்தை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அத்தியாவசியமாகின்றது. அடுத்தபடியாக வாரமொரு முறை அதனை அழகாக கத்தரித்து விடவும் வேண்டியுள்ளது. அதற்காக நகத்தைப் பராமரிக்க சில இலகு வழிகளை பார்ப்போம்.

நகப் பராமரிப்பாக, வெந்நீரில் ஒலிவ் எண்ணெய் கலந்து சிறிது ஊறவிட்டுக் கழுவலாம் வாரமொரு முறை செய்தால் போதுமானது.

நகத்தை வெட்டுவதை இலகுபடுத்த. சிறிது நேரத்திற்கு முன்னர் சிறிது தேங்காய் எண்ணெய்யை நகத்தில் பூசிவிட்டு வெட்டினால், நர்ம் விரும்பிய அளவில், அமைப்பில் வெட்டிக்கொள்ளலாம்.

- நிஹா -