அறிந்திட சில…

 

அபத்தைக் காத்து ஆபத்தைப் போக்கு
விபத்தைத் தடுக்க வேகத்தைக் குறை!

சுகத்தையடைய சோகத்தைத் தவிர்
அகத்தைத் திருத்தி இகத்தை வெல்!

பாகமாயச் சமைக்கும் பக்குவமறி
ரோகம் தவிர்க்க போகம் குறை!

ராகம்தானே இசையின் உயிர்
தேகம் இன்றேல் யோகம் ஏது?

தூரம் காண நேரம் அறி
சோரம் போனால் துயரம் வருமே!

பாரமறியப் பலமே தேவை
தாரமிழந்தால் தரமும் குறைவதோ!

ஓரமின்றேல் உருவமும் இல்லை
வீரம் என்பது விவேகம்தானே!

 

- நிஹா -