வீணன் பேச்சு மலமே நாறும்!

 

ஞானசார பழங் காணின் சேறு
மானங்கெட்ட கேணையன் கூறு
ஈனர்களுக்காக தன்மானம் சோரும்
வீணன் பேச்சு மலமே நாறும்!

வாயைத் திறந்தால் வையம் நாறும்
பேயாய் மாறி நாயாய்க் குரைக்கும்
சாய மூட்டிய சண்டாளன் பேரும்
கோயபல்ஸ் பொய்தனை ஓயாது விஞ்சும்!

ஊனமுற்ற உள்ளம் உடையோன்
பானம் போற்றி ஊணும் உண்போன்
சாணம் நிறை தலையைக் கொண்டோன்
வேணுமென்றே விஷத்தை உமிழ்வோன்!

பேசுவதெல்லாம் பொய் வாய்
கூசாமல் கூறுவதெல்லாம் அபாண்டம்
நாசம் வளைக்கும் தோஷp அவன்
வேஷம் கலைவது வெகுதூரமில்லை!

கொந்தராத்து கொலைகள் கொள்ளை
வங்குரோத்து புத்தி கொள்ளி வைப்பு
தந்தோரைப் போற்ற முந்தானை விரிக்கும்
மந்தார உளம்கொள் விபச்சாரக் காவி!

வஞ்சனையாளரின் வெஞ்சினந் தீர்க்க
கொஞ்சமும் அஞ்சாது கேட்டினை விளைத்து
வஞ்சமறியா முஸ்லிம்களை நஞ்சாய்க் காட்ட
பிஞ்சு மனங்களிலும் நஞ்சை விதைக்கிறான்!

புத்தம் வளர்த்திட மற்றவர் மதத்தை
பித்தனாய் மாறி கொன்று குவித்திட
புத்தர் கூறினாரா போதனை எதிலும்
புத்த துறவிகளே சத்தமாயக் கூறுங்கள்!

மொழியால் நடந்த மோதல்களை மறக்க
பழியால் விளைத்த கொலைகளை மறுக்க
வழியால் கெட்ட மதவிரோத வெறியை
இழிவை நாடிய மலிவாம் அரசநெறி!

கொன்று தின்னலை கொலையாய்க் கருதின்
பன்றி தின்ற பழங்கதை மறதியோ
குன்றுகள் தோறும் பஞ்சலை கட்டின்
குன்றாய் ஒளிருமோ குரவர் கொடுமை!

உயர்ந்த கோபுரம் கட்டிடப் பெருமை
சயனத்தில் தானே புத்தரின் சிந்தனை
மயானத்தில் வருவது அழிவின் நிந்தனை
தியானத்தால் விளைவது இறைவந்தனை!

மந்த அறிவால் மக்களைக் கொன்று
விந்தையாக குந்தகம் செய்து
அகந்தை கொண்டு மாந்தரைப் பழித்து
நினைந்ததில் முயன்றிடில் ஜெகமே பழிக்கும்!

குறுக்கு வழியில் கோணல் புத்தியால்
மறுத்து மற்றவர் பிறப்பு உரிமையை
வெறுக்கும் வழியில் வேதனை விளைக்கும்
பொறுக்கி வேலைகள் புரிவதை விடுவீர்!

உங்களுக்கென்ன முஸ்லிம்கள் செய்தனர்
தங்களின் பாட்டில் தர்மங்கள் செய்து
மங்கலமாக மற்றோரை கற்றோரைப் போற்றி
சிங்கார தேசத்தில் சீராக வாழ்கின்றனர்!

குழப்பங்கள் விளைத்ததும் கூறுகள் போட்டதும்
விளக்கம் இன்றி பிழைப்பு நடத்தியதும்
கலக்கம் இன்றி காவு கொண்டதும்
துலக்கம் இல்லா தூஷனை யாளரே!

முஸ்லிம்களும் ,ந்நாட்டின் மூத்த குடிகளே
நஷ்டம் யாருக்கும் இஷ்டமாய் விழைத்திடாத
இஸ்லாம் கூறும் வழியை ஏற்ற
கஷ்டங்களிலும் கடவுளை நம்பியோரே!

தாய் மொழியாய் தமிழை கொண்டாலும்
வாய் நிறைய சிங்களத்தை வரிந்துகொண்டு
வாய்மை தவறா வழியில் உழைத்து
தூய்மை பேணும் திண்மை படைத்தோர்!

அநியாயம் செய்திடில் செய்யப்படுவீர் நீரும்
அநியாயம் என்பதனை ஏற்று வாழ்வதுடன்
நியாயமாக நீதி தவறாது நேர்மையாக
நேயமாக மனிதம் போற்றி வாழ்கின்றோமே!

 

- நிஹா -