ஹைகூ வில் கவிதைகள்!

 

பாராத கண்ணைப் போன்றதே,
பகுத்துப் பாரா
பகுத்தறிவும்.

மனிதன் பகுத்தறிவால் மட்டுமே
மற்றைய உயிரினங்களைவிட
மேலானவன்.

பயன்படுத்தப்படாத பகுத்தறிவு
வெளிச்சத்தைக்
காணாத பயிரே!

மனித அறிவு பயன்படுத்தப்பட்டால்
அகிலமனைத்தும்
அவன் காலடியில்.

 

- நிஹா -