சிந்திந்துச் செயற்படுவதற்காகச் சில சிறப்பான புனித குர்ஆன் வசனங்கள்
6:125 – அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்புகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவுபடுத்துகின்றான். மேலும். எவரை வழி தவறச் சயெ்ய விரும்பகின்றானோ, அவருடைய நெஞ்சத்தை வானத்தில் ஏறுகின்றவனைப் போன்று சிரமத்துடன் கூடிய நெருக்கடியானதாக ஆக்கிவிடுகின்றான். இவ்வாறே ஈமான் கொள்ளதாவர்கள் மீது தண்டனையை அல்லாஹ் ஏற்படுத்துகின்றான்.4:107 – இன்னும் எவர்கள் தங்களுக்குத் தாங்களே மோசடி செய்து கொண்டனரோ, அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம். பாவம் செய்கின்ற சதி மோசக்காரனை நிச்சயமாக அல்லாஹ் விரும்பமாட்டான்.
4:105 – அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கிடவே, உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம்பால் நிச்சயமாக நாம் இறக்கியுள்ளோம். சதிகாரர்களுக்கு வழக்காடுபவராக நீர் ஆகிவிடாதீர்.
5:44 – “தவ்றாத்“தை நிச்சயமாக, நாம் இறக்கி வைத்தோம். அதில் நேர்வழியும், பேரொளியும் உள்ளன. முற்றிலும் வழிப்பட்டு நடந்த நபிமார்களும், ஞானிகளும், அறிஞர்களும் அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாத்திட ஏற்படுத்தப்பட்டவர்கள் என்ற முறையிலும், அவர்கள் அதன் மீது சாட்சியாளர்களாக இருந்தார்கள் என்பதாலும், அதனைக் கொண்டே யூதர்களுக்கு தீர்ப்பு வழங்கினர். நீங்கள் மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம், என்னையே அஞ்சுங்கள். என்னுடைய திருவசனங்களுக்குப் பகரமாக சொற் கிரயத்தை வாங்காதீர்கள். மேலும், அல்லாஹ் இறக்கி அருளியதைக் கொண்டு தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பாளர்களாவர்.
3:18 – “நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் தன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை“ என்று அல்லாஹ் சாட்சி கூறுகின்றான். அவ்வாறே வானவர்களும். அறிஞர்களும் சான்று பகர்கின்றனர். அவனைத் தவிர வேறு யாருமில்லை. மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
16:37 – அவர்கள் நேர்வழி பெறுவதன் மீது நீர் பேராசை கொண்டாலும், நிச்சயமாக அல்லாஹ், அவன் வழி தவறச் செய்தவரை நேர்வழியில் செலுத்தமாட்டான், இன்னும் அவர்களுக்கு உதவிடுவோர் எவருமில்லை.
14:52 – இது மனிதர்களுக்கு எத்திவைத்தலாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், மேலும், அவன் ஓரே நாயன்தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், இன்னும், அறிவுடையோர் நல்லுணர்வு பெற்றிடவுமாகும்.
4:103 – நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால், பிறகு நின்றவர்களாகவும், அமர்ந்தவர்களாகவும், உங்களது விலாப்புறங்களின் மீதும் அல்லாஹ்வை நீங்கள் துதி செய்யுங்கள். பின்னர் அமைதி பெற்றுவிட்டால் அப்பொழுது தொழுகைளை நீங்கள் நிலைநிறுத்துங்கள். நிச்சயமாக தொழுகையானது இறை நம்பிக்கையாளர்கள் மீது நேரங் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது.
29:45 – இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை, நீர் ஓதிக் காட்டுவீராக! இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவீராக! நிச்சயாகத் தொழுகையாகிறது மானக்கேடானவைகளைவிட்டும், வெறுக்கப்பட்டதை விட்டும், தடுக்கும். மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வது மிகப் பெரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கு அறிகிறான்.
20:14 – நிச்சயமாக நான்தான் அல்லாஹ் என்னையன்றி வணக்கதிற்குரிய நாயனில்லை. ஆகவே என்னையே நீர் வணங்குவீராக! மேலும், என்னை நினைவு கூர்ந்திட தொழுகையை நிலைநிறுத்துவீராக!
25:59 – அவன் எத்தகையவனென்றால், வானங்களையும், பூமியையும், அவ்விரண்டிற்கும் இடைப்பட்டவைகளையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது நிலையானான். அருளாளன். அவனைப் பற்றி நன்கு அறிந்தோரிடம் நீ கேட்பாயாக!
26:3 – அவர்கள் முஃ.மின்களாகாமல் இருக்கிறார்கள் என்பதற்காக, உம்மையே நீர் மாய்த்துக் கொள்வீர் போலும்!
41:34 – நன்மையும் தீமையும் சமமாகாது. எது மிக அழகானதோ அதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக! அப்போது எவருக்கும் எமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர், உமது உற்ற நன்பரைப் போல் ஆகிவிடுவார்.
26:69 – மேலும், எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக நம்முடைய நேரான வழியில் நாம் செலுத்துகின்றோம். நன்மை செய்வோருடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான்.
29:2 – மனிதர்கள் நாங்கள் ஈமான் கொண்டோம் என்று கூறுவதினால் மட்டும், அவர்கள் சோதனை செய்யப்படாமல் விட்டுவிடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா?
29:6 – மேலும், எவர் முயற்சி செய்கிறாரோ, அவர் முயற்சி செய்வதெல்லாம் தமக்கேதான். நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்களைவிட்டும் தேவையற்றவன்.
53:39 – மனிதனுக்கு அவன் முயற்சி செய்ததே அல்லாமல் இல்லை.
28:56 – நீர் விரும்பியவரை நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட முடியாது. எனினும் அல்லாஹ், தான் நாடியவரையே நேர்வழியில் செலுத்துகின்றான். மேலும், நேர்வழி பெறுகின்றவர்களை அவன் மிக அறிந்தவன்.
அல்ஹம்துலில்லாஹ்!
- நிஹா -