முடிந்தால் கசிந்ததை இரசியுங்கள்! சிரியுங்கள்!
விருந்துபசாரமொன்றின் போது ஆண்களா! பெண்களா!
இரகசியத்தைப் பேணுபவர்கள் என்ற சர்ச்சை தோன்றியது!
அதற்கு ஓர் ஆண், பெண்களால் இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்றான்
அங்கிருந்த பெண் விருந்தாளி, நான் 21ஆவது வயது முதல் எனது வயதைக் கூறாது காப்பாற்றி
வருகிறேன் என்றாள்.
அம்மனிதர், நீங்கள் என்றாவது ஒரு நாள் அதனை வெளியிடுவீர்கள் என்றார்
அம்மாது, நிச்சயமாக நான் அப்படி நினைக்கவில்லை. என கடுமையாகவே கூறி,
ஒரு பெண் தனது வயதை 27வருடங்களாகக் கூறாது இரகசியமாகவே
வைத்திருக்கலாம் என்றால், அவளால் எக்காலமும் அந்த இரகசியத்
தைப் பேண முடியும் என்றாள்.
– நிஹா -