குர்ஆன் குறள் !

செய்யாவிடில் நீரும் செய்யப்படமாட்டீர் அநியாயம்
பொய்யாது 2:179குர் ஆனில்

நேர்வழி யென்ப வேறல்ல அல்லாஹ்வதே
சீர்பெறு 3:173ஐகுர் ஆனில்

தேடுறீரோ தாழ்ந்ததை சிறந்ததை விடுத்துவேறு
கூவுதே 2:61 உமை

தேடுவீர் பாதுகாப்பு அறிவீன ராவதைவிட்டும்
நாடுவீர் அல்லாஹ்விடம் 2:67ல்

கேட்கிறேன் அழைப்பினை அழைத்ததும் பதில்தர
கேட்பவரருகிருந்து 2:286ல் பார்

 

- நிஹா -