கைமருந்து

 
அருந்திவர தேன்கலந்த எலுமிச்சைச் சாறு
வருத்திடும் வரட்டிருமல் தீரும்!

துவரம்பருப்புசேர் கருணைக் கிழங்கு சாம்பார்
தவிர்த்திடும் மூல நோயை!

வெள்ளைப்பூண்டு வெற்றிலை யரைத்துப் பூசிவர
தொல்லைதரும் தேமல் தீரும்!

காய்ந்தகமலா ஆரஞ்சுத்தோல் பொடியைப்பூசிக் குளிக்க
மாய்ந்துவிடும் சருமநோய் தானே!

கண்டங்கத்திரி யிலைச்சாறை ஒலிவெண்ணையில் காய்ச்சிப்பூசி
வென்றிடுக பித்த வெடிப்பை!

 

- நிஹா -