நாமே தேடிக்கொள்வதுதான் ஆஸ்த்மா!

அதிகமான உடலுழைப்பு, உடலுறவில் அதிக ஈடுபாடு, நேரந்தவறிய சத்தற்ற வரட்சியான உணவு, ஜீரணக் கோளாறு, வயிற்று உபாதைகள், முக்கியமான உறுப்புகள் பலஹீனமடைதல், வாந்தி எடுத்தல், காய்ச்சல், இரத்த சோகை, உணவில் உழுந்து அதிகம் சேர்த்துக் கொள்ளுதல், எள் துவையல் அதிகம் உண்ணல், தயிர், கறந்த பாலை அப்படியே உட்கொள்ளல், கபத்தை உண்டு பண்ணும் பொருட்களை அதிகம் உட்கொள்ளல் ஆகியவை ஆஸ்த்மாவிற்கான மூல காரணிகளாகும்.

மற்றும் அதிக சூடான பொருட்களையும், அதிக குளிர்ச்சியான பொருட்களையும் அடுத்தடுத்து உண்ணல். இதுவும் ஆஸ்த்மாவை உருவாக்கும்.

ஆஸ்த்மாவிற்கு பண்டைக் காலத்தில் பஞ்சகர்ம சிகிச்சை என்ற முறை கடைப் பிடிக்கப்ட்டு வந்தது. முதலில் உடலைப் பல்வேறு எண்ணெய்களில் குளிப்பாட்டுவார்கள். ஓத்தடத்தினாலும், வேறு பல வழிகளாலும் உடலை வியர்க்கச் செய்வார்கள். இதனால் உடலில் சேர்ந்திருக்கும் சளி வெளிப்பட்டு விடும். இப்படிச் சுத்தமடைவதால் காற்று தங்குதடையின்றி உடலில் செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்று வரமுடியும். இதன் பிறகு நோயாளியின் சக்தி, ஆரோக்கியம் இவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவம் செய்யப்படும்.

ஆடாதொடை ஆஸ்த்மாவைக் குணப்படுத்துவதில் மிகவும் சக்தியுள்ள பிரசித்தி பெற்ற மூலிகை. இது கசப்பாக இருந்தாலும் உடலுக்குப் பலமும் சக்தியும் தரும். முக்கியமாக நுரையீரலுக்கு இது அதிக நிவாரணம் தருகின்றது. அதனால் இந்நோயாளிகளுக்கு ஆடாதொடை இலைகளை அரைத்து அதன் சாற்றை 10 முதல் 20 கிராம் அளவு தினமும் கொடுத்து வரலாம். இதன் வேரின் பட்டையை எடுத்துக் காயவைத்துப் பொடி செய்து தினமும் ஒரு கிராம் அளவு உள்ளுக்குக் கொடுத்து வரலாம். ஆடாதொடை லேகியம் மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதையும் வாங்கிச் சாப்பிடலாம்.
- நிஹா -
படித்ததிலிருந்து…