கலண்டர் தாள்கள் கிழிந்து
வருடம் பிறந்ததைக் கூறும்!
கலண்டர் இல்லா நாளில்
வருடம் பிறக்கலையோ!

கலண்டர்படியும் வருடம்
காலை ஆறு மணிக்கு
பிறந்திடவே செய்யும்
அறிந்திடோமோ நாமும்!

வருடம் முடியும் காலம்
முன்னூற்றறுபத்தைந்தே கால்
என்பதை அறிந்த பின்னும்
ஏனோ இந்த மடமை!

அடுத்த வருடமாவது
விடுத்து பழமைதன்னை 
பகல் பன்னிரண்டு மணிக்கு
புதுவருடத்தை வரவேற்று 
வகுப்போம் புதிய பாதை! 
பகுப்போம் காலம் சமனாய்!

 - நிஹா -