அறிதல் பற்றி சில !
அறியாமை
பொறுமைக்குப் பகை!
குருட்டு நம்பிக்கை
மலட்டுப் பிரசவம்!
அறிவின் செறிவு
ஆற்றுப்படுத்தலில் புரியும்!
செயல் வடிவமே
அறிவின் வெளிப்பாடு!
அறியாமை
அநர்த்தங்களின் நண்பன்!
அறிதல் ஒன்றே
ஆரோக்கிய வழி!
அறிந்தவனிடம் அச்சம்,
கவலை அண்டுவதில்லை!
அச்சம், கவலை அறியாமையின்
வளர்ப்புக் குழந்தைகள்!
அறிதலின் எல்லை அறிந்ததைப்
புரிந்து நடத்தலே!
நம்பிக்கையின்மையின் விளைநிலம்
அறியாமையே!
அறிந்து செய்யாதிருப்பவளைவிட
அறியாமல் இருப்பவன் மேல்!
அறியாதவனுக்கும் மிருகங்களுக்கும் இடையே
பெரிய வித்தியாசம் எதுவுமில்லை!
அறிந்ததைச் செய்பவன் வேலை செய்கிறான்,
அறிந்ததைச் செய்யாதவன் வேலை இழக்கிறான்,
நம்பிக்கையின்மையும், பொறுமையின்மையும்
அறியாமையின் இரு அவதாரங்கள்!
- நிஹா -