குர்ஆன் குரல்

நேர்வழி நின்று பிறழ்விலாது வாழ்ந்திடில்
சேர்வரே இறைவ னடி

அழைக்குது குர்ஆன் அறிந்திட அறிவை
பிழைத்திடா வழியில் நின்று

பார்த்திடு பகறா256 பழுதிலாதறி இஸ்லாம்
மார்க்கத்தில் பலவந்த மிலை

மன்னித்தலும் நல்வார்த்தையும் நனிசிறந்தன2-263ல்
துன்பந்தொடர் தருதர்மத் தைவிட

கிடைத்திடில் ஞானம் அடைந்திடுவர் அதிநன்மை
அறிந்திடார் அறிவிலிகள் 2-29காண்

அல்லாஹ் மலக்குடன் அறிஞரும் கூறுவர்வேறு
அல்லாஹ்வை யன்றியில 3-18பார்

திட்டமா யுளானல்லாஹ் பொறுமை யாளனுடன்
இட்டமாயறி இம்றான் 18

இறைவனின் ஆணைதனை ஈடில்லாச் சத்தியத்தை
பறைசாற்று பகிரங்கமாய் 15-94பார்

வழங்கினானே குர்ஆனில் மீண்டுமீண்டு மோதும்
ஏழையறிய 15-87 பார்

அச்சமும் கவலையு மறவேயொழித் திடென்று
மிச்சமே கூறுது குர்ஆன்
- நிஹா -