வாக்கு பற்றி நோக்குகள் சில!

வாக்குகளை ஞாபகமூட்ட அவதரித்த தூதரனைவரும்
தோற்றுப்போன இடமும் அதுவே!

பிரபஞ்ச மனைத்தும் இறை வாக்கால்
பிரயாணித்துக் கொண்டிருப்பனவே!

இறைவாக்கு படைப்பின் மூலம்.
மனித வாக்கு கிடப்பின் அவலம்!

உலகை இயக்கிக் கொண்டிருப்பதும் வாக்குகளே!
உலகை அழித்துக் கொண்டிருப்பதும் வாக்குகளே!

வாக்காளருக்குக் கொடுக்கப்பட்ட வாக்குகள்
மீறப்படாதிருந்தாலே அது ஆச்சரியம்!

செலவின்றி அளவின்றி அள்ளி
வீசப்படுவதும் வாக்குகளே!

நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகப்
பாவிக்கப்படும் அதிசிறந்த மலிவு கருவி வாக்கு!

நன்மனிதரின் வாக்கு மலர்ந்து மணம் வீசுகின்றது!
தீயோரின் வாக்கு படர்ந்து துர்நாற்றம் வீசுகின்றது!

நிறைவேற்றப்படாத வாக்குகள்
குறை அன்று அரைமாதப் பிரசவக் குப்பைகளே!

அழிவும் ஆக்கமும் வாக்குக் கொடுப்போரின்
அந்தஸ்தை வெளிப்படுத்துவன!

- நிஹா -