1. எல்லோருந் துதிப்போம் அல்லாஹ்வை யறிந்து
நல்லன கேட்போ முதவி 1:3.4.
2. நடத்திடு அல்லாஹ் விடுத்திடா தெமைநீ
நடத்திட்ட வெற்றி வழி
3. ஐந்தாறேழு பாத்திஹா கூறுது நேர்வழி
கடைத்தேறும் வெற்றி வழி
4. செய்திடில் அநியாயம் செய்யப்படுவீர் நீரும்
துய்யோன் கூற்றுபகறா 279
5. அல்லாஹ் அனுமதியாது அடையாரே மரணம்
வல்லானின் வார்த்தை 3:145
6. வீணாக்க மாட்டான் நற்கிரிகையரின் செயலை
காணவே இம்றான் 195
7. அருளினான் ஆடையழ கலங்கரித்து மானங்காக்க
விரும்பியேயணி 7:26 பார்
8. அல்லாஹவின் கருணை பொதிந்துள தனைத்திலும்
சொல்லாலறிய ரஹ்து 156
9. வேதமும் ஞானமும் தந்தானே கற்று
தூதரை யனுப்பி யவன் – 3:164
10. உண்டேயுரிமை பகிரங்கமாய்க் கெட்ட வார்த்தை
இன்றே மற்றோர்க்கு நிஸா148
- நிஹா -