படித்துத்தான் பாருங்களே!

தொடர்ச்சி.

ப வில் பொல் என்றேனே அப்பப்பா
பொல்லார் கையில் உருட்டுப் பொல்லா என்றதே!

ப வில் புள் எனப் பறவையினைக் கூறுவரே எனுமுன்
புள்ளடி போட்டுப் படும் பாடு தெரியலையா என்கின்றதே!

ப வில் பூ என்றதும் பூவா தலையா
போடுமுன்னே பேசிடும் பேரமா இது என்றார்!

ப வில் பூ என்றேன் மறுபடியும் பூசி மெழுகி
பின்னணி தேடும் படலமா என்கின்றாரே!

ப வில் பசி என்றேன் தொடர்ந்திடாதே பலதும் பத்தும்
புகுந்து பயங்கரம் விளைக்கும் என்கின்றதே!

ப வில் புசி என்றால் பசிக்கு உணவின்றிப்
புசித்திடாத ஏதிலிகள் காணலையோ என்றதே!

ப வில் பசி என மீண்டபோது பசியில்லாது புசித்து
புசித்ததை இறக்க பத்தியம் பார்க்கும் பாதகரா என்றதே!

ப வில் பரிவு என்றேன், பரிவு என்றால் உனக்கு
புரிந்திடுமா என பதில் கேட்டு நிற்கின்றதே!

ப வில் பிறை என்றேன் பிறைசூடிய கதைவிடாதே!
பிறையில் மனிதக் கால் ப(மி)தித்தது என்றதே!

ப வில் புரிதல் என்றேன் புரிந்துணர்வு ஒப்பந்த காலமா
பேசிடாதே அப்பகுதிகள் பட்ட பாட்டை என்கின்றதே!

- நிஹா -