1. வட்டில் இருந்து பயனென்ன சோறு போட ஆளின்றேல்!

2. கட்டில் இருந்து யாது பயன், கட்டிய மனைவி வீட்டிலின்றேல்!

3. தொட்டில் இருந்தென்ன பயன் குழந்தைப் பேறில்லாதபோது!

4. தோட்டிகள் இருந்தென்ன பயன் தெருக்கள் அழுகி நாறுமாயின்!

5. கோர்ட்டுகள் இருந்தென்ன பயன் நீதிதேவன் தூங்கி வழிவதாயின்!

6. போட்டி வியாபாரம் நடந்தென்ன பயன் விலைகள் வானத்தைத்         தொடுவதாயின்!

7. நோட்டில் சைபர்கள் கூடியென்ன பயன் வாங்கும் திறனை இழக்கும் போது!

8. பாட்டில் அழகு இருந்தென்ன பயன் பயனில் கருத்துக்கள்  கொண்டதாயின்! 

9. வோட்டு இருந்தென்ன பயன் போடுவதற்கு தகுதியான வேட்பாளர்கள் போட்டியிடாதபோது!

10. நாட்டில் அபிவிருத்தி நடந்தென்ன பயன் நாட்டினர் வாழ்வே கேள்வியாயின்!

- நிஹா -