பாலன் பிறந்த பின் உறக்கம்,
காலன் வந்திடில் கிறக்கம்!
நாய் வாலை ஆட்டின் நன்றி,
நோய் ஆளை வாட்டின் குன்றும்!
காய்ச்சினும் பால் வெள்ளை,
வாய்த்திடேல் பெண்டும் தொல்லை!
கனத்தால் பாரமறி,
கணித்துப் பெறுமானம் அறி!
சினத்தை வீசி எறி,
இனத்தை அழிக்கும் வெறி!
பாகல் கசப்பினும் களிப்பைத் தரும்,
பாகம் செய்திடில் அனைத்தும் சுகம்!
கூடிடில் காற்றும் தொல்லை,
குறைந்திடில் உயிரே இல்லை!
குணம் கொண்டால் அழகு,
குணம் காண ஒழுகு!
இனித்ததெல்லாம் தேனும் அன்று,
இளித்ததெல்லாம் ஏற்பும் அன்று!
பசியைப் போக்கும் அளவு,
பசிக்கு மேல் பெறல் களவு!
- நிஹா -