இப்பதிவு முநூலில் இருந்து பெறப்பட்டது. பீஜே அவர்களின் ஒன்லைன் கேள்வி – பதில் நிகழ்வில் அல்லாஹ் பற்றிய கேள்வி ஒன்றுக்கு, அல்லாஹ் ஔியாக இருப்பதால் இவ்வுலகில் காண முடியாது. மறுவுலகில், நமக்கு தரப்படும் வேறொரு அமைப்புள்ள கண்களினால் காணலாம் என பீஜே கூறிய கருத்துக்கு, மாற்றுக் கருத்தாகப் பதிவாகி இருந்த குர்ஆனிய உண்மைகளை, வாசகர் நலன் கருதி, இப்பகுதியில் பதிவிடுகிறேன்!

நற்சிந்தனை! 34

கலிமா கூறும் ஏகத்துவம் !

தௌஹீத் என்றால் என்ன என்ற விளங்கிக் கொள்ளாதவரை அல்லாஹ் பற்றிய குழப்பங்களுக்கு அளவே இருக்காது. அதனை விளங்க வைக்கவே வேதங்கள், நபிமார், ரசூல்மார் உலகுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் கொணர்ந்த தாரக மந்திரம், லா இலாஹ இல்லல்லாஹ் அதாவது, அல்லாஹ்வைத் தவிர எதுவுமில்லை. நமது நாயகம் ஸல் அவர்களுக்கு அல்லாஹ், நீர் இபுறாஹிமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக எனக் கூறிவிட்டு, இபுறாஹிம் இணைவைப்போராக இருக்கவில்லை என்கின்றான். Continue reading