Daily Archives: November 26, 2014

நாம் செல்ல வேண்டிய வழியை உறுதி செய்து கொள்வது எப்படி!

நாம் செல்ல வேண்டிய வழியை உறுதி செய்து கொள்வது எப்படி!

நாம் ஓரிடத்துக்குச் செல்ல வேண்டியிருந்தால், அதற்கான ஆயத்தங்களைச் செய்வதோடு போகவுள்ள பாதை பற்றிய அறிவு வேண்டப்படுகின்றது. காரணம், பாதையே நாம் செல்ல வேண்டிய இலக்கை அடைவதற்கு உறுதுணையாயிருப்பது. ஒரு இலக்கை அடைவதற்குப் பல பாதைகள்கூட இருக்கலாம். அத்தனை பாதையிருந்தும் சில வேளை புதிய பாதை ஒன்றைப் போட்டுச் செல்ல வேண்டிய நிலைமைகூட காணப்படலாம். குறுக்கு வழிப் பாதைகள், ஒற்றையடிப் பாதைகள் எனப் பல்வேறு வகைத்தானவையும் உண்டே! இவை பாவிப்பவர்களின் திறன், அறிவு, அனுபவம், தேவை, வசதி என்பவற்றை உள்ளடக்கி அவரவர்களின் தெரிவுக்கு உள்ளாகும்.

Continue reading

நாடு போகிற போக்கில் நாட்டு மக்களின் சுயாதீனம்…. ஒரு பார்வை!

நாடு போகிற போக்கில் நாட்டு மக்களின் சுயாதீனம்…. ஒரு பார்வை!

நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பேன் எனப் பயபக்தியோடு சத்தியஞ் செய்து பாராளுமன்ற அங்கத்தவர்களாகப் பதவி வகிப்போர் அவர்கள் சத்தியம் செய்து எடுத்த உறுதிமொழியைப் பாதுகாக்கத் தவறியுள்ளதன் மூலம், பாராளுமன்றின் சிறப்புரிமைகளை மீறியுள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்றி மக்கள் அவர்களிடம் அளித்திருந்த நம்பிக்கைப் பொறுப்பை மீறியுள்ளனரா! அல்லது இரண்டுமா!

யாப்பின் Xஆவது உறுப்புரையின் 63ஆவது பந்தியில் கூறப்பட்ட சத்தியத்தைச் செய்து அதனைச் செயற்படுத்தத் தவறியமை, பாராளுமன்ற அங்கத்தவரது தலையாய கடமையைச் செய்யாமல் புறக்கணித்ததாக அமையுமானால், அந்த அங்கத்தவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? அவர்கள் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்தமையாகக் கொள்ள முடியுமா? என்பதும் ஓர் முக்கிய விடயமாகக் கருதப்பட வேண்டியதே! சத்தியம் செய்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்தாதவர்கள் பற்றிய நடைமுறைச் சட்டமென்ன? Continue reading