Daily Archives: November 3, 2014

நீர் பற்றி நான்!

நீர் பற்றி நான்

நீள்நிலமும் பாழாகும் நீரின்றேல் அக்கணமே
ஆளில்லாக் கிரகமாம் அறி

தோன்றும் மறையும் துயர்துடைத்து காக்கும்
என்றுமே அழிவில்லை அறி

சேற்றிலும் சங்கமம் காற்றிலும் பவனி
கூற்றம் காணாது காண் Continue reading

புதிய நீதி மொழிகள் !

புதிய நீதி மொழிகள் !

 
தோட்டிதான் கூட்டுகிறானே என்பதனால்
றோட்டில் கூளம் போடுவது நீதியா!

கோர்ட்டில் நீதி பெறலாம் என்று மட்டும் போகாதீர்
ஓட்டோடு திரும்பி வந்து விடுவீர்கள்!

எத்தனைதான் வாதங்கள் செய்தாலும் நீதி கேட்டு
அத்தனையும் பக்கத்தில் அமர்ந்து எழுதுவோன் கையில்!

கறுப்புக் கோட்டை அணிந்ததனால்தான்
விருப்பமான வழிகளில் நீதி பழஞ் சேதியாகிறதா!

நீதிபதிகள் சேதிகளைக் கேட்டு தீர்ப்பளிப்பதால்
வாதிகள் கவனம் சேதிகளை சமர்ப்பிப்பதில்!

வீட்டின் முன்னால் கூளம் கிடந்தால்
வீட்டுக்காரன் தண்டிக்கப்படுவது புது நீதி!

போதி மாதவர்கள் சாதி பேசி சங்கடம் செய்தால்
நீதி காக்கும் நகர்காவலர் மௌனிகளாகனும்! Continue reading

குர்ஆனில் தொழுகை!

குர்ஆனில் தொழுகை!

தொழுகை சம்பந்தமாக இறக்கி அருளப்பட்ட குர்ஆனிய வசனங்கள்!

2:238 தொழுகைகளையும். நடுத் தொழுகையையும் பேணி வாருங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்களாக நில்லுங்கள்.

11:114 பகலின் இரு ஓரங்களிலும், இரவிலிருந்து ஒரு பகுதியிலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக! நிச்சயமாக நற்செயல்கள், தீயசெயல்களைப் போக்கிவிடும். நினைவுகூர்ந்திடுவோருக்கு இது ஒரு நல்லறிவரையாகும்!

17:78 சூரியன் சாய்ந்ததிலிருந்து, இரவின் இருள் சூழும் வரை தொழுகைகளை நிலைநிறுத்துவீராக! மேலும், ஃபஜ்ர் தொழுகையையும், நிச்சமாக ஃபஜ்ருடைய தொழுகையானது வருகைக்குரியதாக இருக்கிறது.

17:79 நீர் உமக்கு உபரியாக இரவிலும் தஹஜ்ஜுத் தொழுகையைக் கொண்டு நிறைவேற்றுவீராக! உம்முடைய ரப்பு உம்மைப் புகழுக்குரிய இடத்தில் நிலைப்படுத்தப் போதுமானவன்.

20:130 எனவே, அவர்கள் கூறுவதின் மீது நீர் பொறுமையை மேற்கொள்வீராக! இன்னும் சூரிய உதயத்திற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும் உம்முடைய ரப்பை புகழ்ந்து துதிப்பீராக! இரவு நேரரங்களிலும், பகலின் ஓரங்களிலும் நீர் துதி செய்வீராக! நீர் திருப்தி பெறலாம்!

30:17 நீங்கள் மாலைப் பொழுதை அடையும் போதும், நீங்கள் காலைப் பொழுதை அடையும் போதும் அல்லாஹ்வைத் துதித்து வாருங்கள்.

30:18 வானங்களிலும், பூமியிலும் புகழனைத்தும் அவனக்கே உரியன. நீங்கள் முன்னிரவிலும், நடுப்பகலில் இருந்திடும் போதும்.

50:339 ஆகவே, அவர்கள் கூறுகின்றவற்றின் மீது நீர் பொறுமையாக இருப்பீராக! சூரிய உதயத்திற்கு முன்னரும், மறையும் முன்னரும் உமது ரப்பின் புகழைக் கொண்டு துதி செய்வீராக!

50:40 மேலும், இரவின் ஒரு பாகத்திலும் சுஜுதுக்குப் பின்னரும்அவனைத் துதி செய்வீராக!

73:2 இரவில் எழுந்து நிற்பீராக! சிறிது நேரம் தவிர!

73:3 அதில் பாதி அல்லது சிறிது குறைத்துக் கொள்வீராக!

73:4 அல்லது அதைவிட அதிகப்படுத்திக் கொள்வீராக! குர்ஆனை அழகாக நிறுத்தி நிறுத்தி ஓதுவீராக!

73:6 நிச்சயமாக, இரவில் எழுந்திருப்பதானது ஒன்றிணைந்திருக்க அது மிக்க வலிமையுடையதாகும். இன்னும் சொல்லால் மிக நேர்த்தியானதுமாகும்.

2:21 மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ரப்பையே வணங்கு(அறி)வீராக! நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.

2:43 மேலும், நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தையும் கொடுத்து வாருங்கள். மேலும், ருகூஉ செய்பவர்களுடன் இணைந்து நீங்களும் ருகூஉ செய்யுங்கள்.

2:110 மே லும், நீங்கள் தொழுகையைக் கடைப் பிடியுங்கள். ஜகாத்தையும் கொடுங்கள். மேலும், உங்களுக்காக நீங்கள் என்ன நற்செயலை அனுப்பி வைக்கிறீர்களோ அதனையே அல்லாஹ்விடம் அடைந்து கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைக் கூர்ந்து பார்த்தவாறு இருக்கிறான்.

2:239 ஆகவே, நீங்கள் அஞ்சுவீர்களாயின், நடந்தவர்களாகவோ, அல்லது வாகனித்தவர்களாகவோ. அச்சம் நீங்கிவிட்டால், அல்லாஹ் உங்களுக்கு அறியாதிருந்தவற்றைக் கற்றுக் கொடுத்தவாறு அவனை நினைவு கூர்ந்திடுங்கள்.

17:110 நீர் கூறுவீராக! “நீங்கள் அல்லாஹ் என்ற அழையுங்கள், அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள், எதை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு அழகிய திருப்பெயர்கள் உள்ளன. நீர் உம்முடைய தொழுகையில் சப்தமிட்டு ஓதாதீர்.அதில் மெதுமெவாகவும் ஓதாதீர். இன்னும் இவ்விரண்டிற்குமிடையே ஒரு வழியை மேற்கொள்வீராக!

62:9 முஃமின்களே! ஜுமுஆ நாளன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவுகூர்வதன் பால் விரைந்து செல்லுங்கள். மேலும், வணிகத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் அறிவீர்களாயின், இதுவே உங்களுக்கு மிக்க மேலானதாகும்.

73:20 நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தினரும், இரவில் மூன்றில் இரண்டு பாகத்தைவிட சற்றுக் குறைவாக, இன்னும் அதில் ஒரு பாதியில், இன்னும் அதில் மூன்றில் ஒரு பாகத்தில் நிற்கிறீர்கள் என்பதை நிச்சயமாக உமது ரப்பு அறிவான். இன்னும் இரவையும், பகலையும் அல்லாஹ்தான் நிர்ணயித்துள்ளான். அதனை நீங்கள் சரியாகக் கணக்கிட முடியாதென்பதையும் அவன் அறிந்துள்ளான். ஆகவே, அவன் உங்களை மன்னித்து வி்டடான். எனவே, குர்ஆனிலிருந்து இயன்றதை நீங்கள் ஓதுங்கள். உங்களில் நோயுற்றவர்கள் இருக்கக்கூடும் என்பதையும் , இன்னும் சிலர் அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வின பாதையில் போரிட நேரிடும் என்பதையும் அவன் நன்கறிவான். எனவே, அதிலிருந்து இயன்றதை ஓதுங்கள். இன்னும் தொழுகைகளை முறையாக நிறைவேற்றுங்கள். ஜகாத்தையும் கொடுத்து வாருங்கள். மேலும், அ்ல்லாஹ்வுக்கு அழகிய டனாக கடன் கொடுங்கள். மேலும், நீங்கள் நன்மையானவற்றில் உங்களுக்காக எதை முற்படுத்தி வைப்பீர்களோ, அது அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்ததாகும். கூலியில் மிக மகத்தானதாகவும் அதனை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். மேலும், அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுடையவன்.

76:26 இன்னும் இரவில் அவனுக்கு சுஜூது செய்வீராக! இரவில் நீண்ட நேரம் அவனைத் துதி செய்வீராக!

107:4 எனவே தொழுகையாளிகளுக்குக் கேடுதான்!

107:5 அவர்கள் எத்தகையோ‌ரன்றால் தொழுகையில் மறந்தவர்களாக இருப்பார்கள்.

107:6 இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், மற்றவர்களுக்குக் காண்பிக்கிறார்கள்!

108:2 எனவே, உமது ரப்பைத் தொழுது, இன்னும் அறுப்பீராக!

4:103 நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால், பிறகு நின்றவர்களாகவும், அமர்ந்தவர்களாகவும், உங்களது விலாப்புறங்களின் மீது அல்லாஹ்வை நீங்கள் துதி செய்யுங்கள். பின்னர், அமைதி பெற்று விட்டால் அப்பொழுது தொழுகையை நீங்கள் நிலை நிறுத்துங்கள். நிச்சயமாக தொழுகையானது இறை நம்பிக்கையாளர்கள் மீது நேரங் குறிப்பிடப்பட்ட கடமையாக இருக்கின்றது.

29:45 இவ்வேதத்தில் இருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் ஓதிக் காட்டுவீராக1 இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாகத் தொழுகையாகிறது மானக்கேடானவைகளை விட்டும் வெறுக்கப்பட்டதை விட்டும் தடுக்கும். மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வது மிகப் பெரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கு அறிவான்.

20:14 நிச்சயமாக, நான்தான் அல்லாஹ். என்னையன்றி வணக்கத்திற்குரிய நாயனில்லை. ஆகவே, என்னையே நீர் வணங்கு(அறி)வீ)ராக! மேலும், என்னை நினைவு கூர்ந்திட, தொழுகையை நிலை நிறுத்துவீராக!  

2:153 முஃமின்களே! நீங்கள் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

http://factsbehind.net/wp/?p=536

14:31 ஈமான் கொண்டுள்ள எனது அடியார்களுக்கு எதில் கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லையோ அந்த நாள் வருவதற்கு முன், தொழுகையை அவர்கள் நிலை நிறுத்துமாறும், அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்து கொள்ளுமாறும் நீர் கூறுவீராக! http://factsbehind.net/wp/?p=684

 

 

- நிஹா -