நற்சிந்தனை – 23

முகநூலில் “குர்ஆன் முழுமையானது“ என்ற வலையில் தொழுகை பற்றிய பதிவொன்றில் கொடுக்கப்பட்ட கருத்துப் பதிவு

குர்ஆன் முழுமையானது. ஆம் அல்லாஹ் சம்பூரணமாக்கியுள்ளதாகக் கூறி விட்டான். இந்த உண்மை ஒன்றே போதும் குர்ஆன் முழுமையாக அணுகப்பட வேண்டிய ஓர் உன்னதக் கருவூலம் என்பதை உணர. அது ஏதோ ஒரு குறிப்பிட்ட அடிப்படை உண்மையை மையப்படுத்தி மற்றைய இம்மை, மறுமைக்கான அனைத்தையும் கூறி இருக்கின்றது. அதனால், மற்றைய அனைத்தையும் அறிய, உணர, நடைமுறைப்படுத்த முற்படும் ஒருவர் அதனடிப்படையோடு முரண்படாத, அவ்வடிப்படையை முன்னிறுத்தியதாக மற்றைய அனைத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும். அப்படி விளங்காதோரை ஊர்வனவற்றில் மிக மோசமானதாகக் கூறுகின்றான். விளங்காகதோர் மீது வேதனையை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றான். Continue reading