Monthly Archives: September 2014

ஞானக் குறள் !

ஞானக் குறள் !

தன்னை யுணர்வதே பேரின்பம் உணர்ந்தபின்
தானிரண்டறக் கலப்பதே உயர்வு!

கண்ணை மூடித் தன்னைக் காணல்
தன்னையறியும் தவமே யாகும்! Continue reading

ஹை கூ வில் காவு கொண்ட பா !

ஹை கூ வில்

காவு கொண்ட பா !

காவி !
பாவி !
கூவி !

தாவி!
ஏவி!
நோவி!

கொள்ளை!
கொள்ளி!
கொலை!

பழிப்பு!
களிப்பு!
தவிப்பு!

அழிப்பு!
ஒழிப்பு!
இழப்பு!

குவிப்பு!
காப்பு!
கலைப்பு!

நெறிதவறி!
தறிகெட்டு!
குறிவைத்தது!

சட்டம்!
ஒழுங்கு!
சகதியுள்!

யாப்பு!
கோப்பில்!
கிடப்பில்!

ஆ…!
ஓ…….!
ஊ….!

 

- நிஹா -

வீணன் பேச்சு மலமே நாறும்!

வீணன் பேச்சு மலமே நாறும்!

ஞானசார பழங் காணின் சேறு
மானங்கெட்ட கேணையன் கூறு
ஈனர்களுக்காக தன்மானம் சோரும்
வீணன் பேச்சு மலமே நாறும்!

வாயைத் திறந்தால் வையம் நாறும்
பேயாய் மாறி நாயாய்க் குரைக்கும்
சாய மூட்டிய சண்டாளன் பேரும்
கோயபல்ஸ் பொய்யின் நோயாய் விஞ்சும்! Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 8:2

முஃமின்கள் எவர்கள் என்றால், அல்லாஹ் என்று கூறப்பட்டால், அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கி விடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவை அவ்ர்களுக்கு ஈமானை அதிகமாக்கும். மேலும், அவர்கள் தங்கள் ரப்பின் மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள். Continue reading

UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE!

தினமொரு திருமறை வசனம்  தெரிந்த மொழியில் மனனம் செய்ய!

அல் குர்ஆன் 14:52

இது (குர்ஆன்) மனிதருக்கு எத்தி வைத்தலாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், மேலும், அவன் ஓரே நாயன்தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், இன்னும் அறிவுடையோர் நல்லுணர்வு பெற்றிடவுமாகும்.

– நிஹா –

Al Quran 14:52

Here is a Message for mankind: That they may take warning therefrom, and may know that He is One Allah: Let men of understanding take heed.

– Niha -

தீர்ப்புக் கூறுவதற்கு தகுதி பெறுதல்..

தீர்ப்புக் கூறுவதற்கு தகுதி பெறுதல்….

 

உலக விவகாரங்களில், (சிறப்பாக இயற்கையோடு ஒட்டிய விடயங்களில்), கருத்து வேற்றுமை ஏற்படும் போது, இஸ்லாமியராகிய நாம், குர்ஆனிலிருந்து தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றான் வல்ல நாயன் அல்லாஹ். தீர்வு என்ற ஒன்றில் அல்லாஹ்வும் அவனது நபியும் தீர்ப்பளித்துவிட்டால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியதும் இஸ்லாமியனது கடமை.

தற்காலத்தில் அல்லாஹ்வின் வேதமும் தீர்ப்புக்காக நபிகள் ஸல் அவர்களது ஹதீதும் பயன்படுத்தப்படு கின்றது. ஹதீது ஒன்றைத் தீர்வுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் போது, அது குர்ஆனுக்கு முரண்படாத கருத்தைத் தாங்கியுள்ளதா என்பதில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். சில விடயங்களில் அச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் விதமாகவும், இன்னொரு சந்தர்ப்பத்தில் பிரயோகமாகாத ஆலோசனைகளாகவும் இருக்கலாம். அல்லது, அது போன்ற நிலையில் மட்டுமே அது செல்லுந் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம். அவ்வாறான நிலையினைக் கொண்ட ஹதீதுகள், உண்மை யானவை என ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும், அவை தேவை கருதிய செயற்பாடாகவோ, சொல்லாகவோ, அங்கீகாரமாகவோ இருக்கலாம். Continue reading

‘கோ’னுயர்ந்தால் வீணழிவே!

‘கோ’னுயர்ந்தால் வீணழிவே!

ஞானசாரா ஞானம்சாரா கோணற் குணத்தாய்
மானமற்று கேணைத்தனமாய் மனிதாபிமாமும் இன்றி
ஊனமனத்தால் காணாததைக் கண்டதாக குர்ஆனில்
வீணாய்ப் பழிசுமத்தி மக்களை வழிகெடுத்தாய்!

அதனால் மானாய் மருண்டனர் மக்கள்
வீணாய் அளுத்தகம அழித்தது கண்டு
போநாய் எனக்கூற ஒரோநாயும் இல்லாது
தானாய் நடத்தினர் ‘பொ’னாக்கள் பார்த்திருக்க!

பானமருந்தி நாணமின்றி சோனகர் சொத்தை
காணச்சகியாது ஈனத்தனமாய் எரித்தே தள்ளினர்
‘ஜ’னாவும் ‘கோ’னாவும் கூசாமற்சுமத்தினர் குற்றம்
‘ம’னாவின் மானங்காக்க ஐநா சென்றதை மறந்து!

பேனாக்காரர் சேனா(ய்)க் கூட்டத்தைக் கண்டனரில்லை
கண்டிக்க வுமில்லை தண்டிக்க வேண்டியோர்
மண்டியிட்டனர் தண்டல்கார தலைவனின் கூற்றால்
குண்டர்படையினர் கொளுத்தி கொள்ளையு மடித்தனர்!

காவிகள் கவிகளாய் காடைத் தனத்தால்
காவு கொண்டனர் தாவிச் சென்றே
மூதேவிகள் செயலால் சீதேவிகள் அழிந்தனர்
கோதாவில் நின்றோர் பேதமை காட்டினர்!

சாதுக்கள் பெயரில் சண்டாளர் கூட்டம்
வாதுகள் செய்து வம்பை வளர்ப்பதா
மோதுதல் விரும்பா மூமின்களை அழிக்க
சூதுகள் செய்து தீதுகள் செய்யாதீர்!

போதும் உங்கள் புன்மனச் செய்கை
மீத முள்ளதைக் பாதுகாத்திட நாமும்
மோதும் நிலையை உருவாக்கியே எம்மை
ஏதும் செய்திட ஏவுறீர் தூண்டி!

 

- நிஹா -