Daily Archives: July 14, 2014

சிந்தனைத் துளிகள்! யார் பெரியவன்!

சிந்தனைத் துளிகள்!

யார் பெரியவன்!

ஓர் வாகனத்தின் அனைத்து பாகங்களும் , சாரதியும் தம்மால்தான் இந்த வாகனம் ஓடிக் கொண்டிருக்கின்றது என்று பெருமை பேசிக் கொண்டிருந்தார்கள். இதனை அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்த காற்று, சிறு புன்முறுவலுடன் வெளியேறும் சப்தத்தைக் கேட்டு அனைவரும் வெளியில் வந்து அதனைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். Continue reading

Quran Kural ! Charity!

குர்ஆன் குறள் – தர்மம்!

திருப்பொருத்தம் நாடி செய்திடும் தர்மம்
ஈர்த்திடும் இறை பார்வை!                 2:265

சொல்லிக் காட்டிடும் தர்மத்தின் இழிவுதனை
துல்லியமாய் 2:264இல் காண்! Continue reading

இயற்கை வைத்தியம் ஆபத்தில்லாதது!

இயற்கை வைத்தியம் ஆபத்தில்லாதது!

 

கூந்தல் பராமரிப்பில் வெங்காயம்



கூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம். அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம். இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை. எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கூந்தலை பராமரித்தால், நிச்சயம் அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

Continue reading

ஹை கூ கவிதைகள்!

ஹை கூ கவிதைகள்!

 

மர்ம ஸ்தாபனங்கள்

தர்ம ஸ்தாபனங்களாக உருவெடுத்தவை
மர்ம ஸ்தாபனங்களாக மாறி
உலுக்கிக் கொண்டிருக்கின்றன உலகை!

 

சமாதானம் – புதிய பதிப்பு!

கிபி 21 அகராதி
புதிய பதிப்பு – சமாதானம் :
நாடுகளின் வளங்கள், நலன்கள் சுரண்டப்படுதல்!

 

குற்றவாளிகளும் – கற்றவர்களும்!

குற்றவாளிகள்
நாடுகளின் தலைவர்களாகியுள்ளதால்
கற்றவர்களைக் காண முடிவதில்லை!

- நிஹா -

HOLY QURAN VERSE TO UNDERSTAND AND MEMORIZE !

தினமொரு மறை வசனம் மனனம் பண்ண!

 

அல் குர்ஆன் 25:52

ஆகவே, நீர் நிராகரிப்போருக்கு வழிப்படாதீர், அன்றி, இதனை (குர்ஆனை)க் கொண்டு நீர் அவர்களிடம் கடின முயற்சியாக முயற்சி செய்வீராக!

– நிஹா -

 

Al Quran 25:52

Therefore listen not to the Unbelievers, but strive against them with the utmost strenuousness, with (Quran).

- niha -

அறிந்து கொள்வோம்! கழுகு பற்றிய சில உண்மைகள்!

அறிந்து கொள்வோம்!

 

கழுகு பற்றிய சில உண்மைகள்!

 

கழுகின் பார்வை, மனிதனிலும் பார்க்க ஆறு மடங்கு அதிகம்.

பறந்து கொண்டே இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பொருளை மிகவும் துல்லியமாகப் பார்க்கும்.

தான் கண்டது தனக்குரிய உணவாயின் நூறு மைல் வேகத்தில் இலக்கை நோக்கிப் பறந்து, அதனைக் குறி தவறாது இறாஞ்சிக் கொண்டு போகும்.

கழுகின் சிறகுகள் குறித்த காலத்தில் முதிர்ச்சி அடைந்து விட்டால் அதனால் பறக்க முடியாது. அக்காலத்தில் எளிதில் யாரும் நெருங்க முடியாத மிக உயர்ந்த மலைக் குன்றுகளில் அமர்ந்து, முற்றிய தனது இறக்கைகளைப் பிடுங்கி எறியும். பின்னர் அவை மீண்டும் முளைக்கும் வரை உணவின்றி அவ்விடத்திலேயே இருக்கும்.

- நிஹா -