நற் சிந்தனை! 15

 

நீதி செய்தால் மட்டும் போதாது, நீதி செய்வது வெளிப்படையாகத் தெரிய வேண்டும்!

இஸ்லாமியர் தம்மை ஒரு தனி இனமாக அடையாளப்படுத்துவதில் தவறில்லை. ஆனால், மற்ற இனங்களிடமிருந்து ஒதுங்கி வாழும் இனமாக, சமூக இசைவற்ற இனமாக பிறர் கணிக்கும்படியான வாழ்க்கை வாழும் ஒரு சமுதாயமாக மாறிவிடக் கூடாது. அப்படி வாழ்தல், இஸ்லாத்திற்குச் செய்யும் அப்படடமான துரோகமாகும்.

இஸ்லாம் ஒரு நடைமுறை மாரக்கம். செய்து காட்டலினால் மக்கள் மத்தியில் அறிமுகமான மார்க்கம். செய்து காட்டல் என்னும் போதே அதில் மறைந்துள்ள உண்மை வெளிப்படையாக விளங்குகின்றது. செய்து காட்டலுக்கு பார்வையாளர் தேவையாக இருக்கின்றது. இங்கு செய்து காட்டல் என்பதில் பார்வையாளர்களைக் கூட்டி ஏதோ ஒன்றைச் செய்து காட்டும் வேலை நடைபெறுவதில்லை. ஆனால், மக்களோடு மக்களாக குர்ஆனின் அடிப்படையில் வாழ்வதன் மூலம் இஸ்லாம் கூறியுள்ள பண்புகளை நமது நடத்தையின் மூலம் வெளிப்படுத்துவதனால் உலகறியச் செய்ய முடியும். உண்மையிலேயே இதுவே சிறந்த தஃவாப் பணியாகவும் கருதலாம். Continue reading